மேலும் அறிய
Advertisement
திருத்துறைப்பூண்டி அருகே 7 ஆண்டுகளாக தூர்வாராத பாசன வாய்க்கால் ; சொந்த செலவில் தூர்வாரி வரும் விவசாயிகள்
திருத்துறைப்பூண்டி அருகே 7 ஆண்டுகளாக தூர்வாராத பாசன வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரி வரும் விவசாயிகள்.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினை உரிய நேரத்தில் தண்ணீர் வராத காரணம் பருவமழை பொய்த்து போனது உள்ளிட்ட காரணங்களால் ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மீண்டும் காவிரி நீர் உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் மூன்று போகம் சாகுபடி பணிகளில் திருவாரூர் தஞ்சாவூர் உள்ள மாவட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அந்த தண்ணீர் ஆனது கடைமடை பகுதிக்கு முழுமையாக வந்து சேரவில்லை குறைந்த அளவு தண்ணீர் திறப்பதன் காரணமாக ஒரு சில ஆறுகளில் மட்டுமே தண்ணீர் செல்கிறது அதே நேரத்தில் பாசன வாய்க்காலில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது இதன் காரணமாக நெல் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஆறு மற்றும் பாசன வாய்க்காலை தூர்வாருவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்து பல இடங்களில் ஆறு மற்றும் ஏ பி சேனல் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள முள்ளை ஆற்றில் இருந்து பிரியும் மங்கள வாய்க்கால் கடந்த ஏழு வருடமாக தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வாய்க்காலை நம்பி ஆதிரங்கம் சேகல் ஆகிய இரண்டு கிராமங்களில் 2000 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் மங்கள வாய்க்காலை தூர்வாராததன் காரணமாக இரண்டு கிராமங்களுக்கும் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு 1500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தண்ணீர் இல்லாமல் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு விவசாயி ஆயிரம் ரூபாய் பணம் போட்டு மங்கள வாக்காளை ஹிட்டாச்சி எந்திரம் மூலமாக தாங்களே தூர்வாரி வருகின்றனர்.
தற்பொழுது பயிரிடப்பட்ட குறுவை நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வரும் நிலையில் அடுத்த கட்ட சாகுபடியான சம்பா சாகுபடியாவது முழுமையாக செய்ய வேண்டும் ஆகையால் நாங்களே பணம் போட்டு எங்களுடைய சொந்த செலவில் பாசன வாய்க்காலை தூர்வாரி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் முல்லையாற்றில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் தண்ணீர் வந்தால் மட்டுமே தற்போது பயிரிட்டுள்ள பயிர்களை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும் இல்லையென்றால் செய்த செலவு மொத்தமாக இழந்து விடுவோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion