மேலும் அறிய
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார்; ஊர் மக்களுடன் போராட்டத்தில் குதித்த மருமகள்
காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார். கணவர் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.
![வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார்; ஊர் மக்களுடன் போராட்டத்தில் குதித்த மருமகள் Thiruvarur Mother-in-law who bullied her for dowry; The daughter-in-law who jumped into the struggle with the townspeople TNN வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார்; ஊர் மக்களுடன் போராட்டத்தில் குதித்த மருமகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/03/570b27e03982ace857c7fee6b83f259e1683122342291113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தர்ணாவில் ஈடுபட்ட பெண்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட முனியூர் பகுதியைச் சேர்ந்த தனபால் மணிமேகலை தம்பதியினரின் மகள் சுகன்யா வயது 24. இவர் அருகில் உள்ள பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குமார் ராஜலட்சுமி தம்பதியினரின் மகன் மாதவன் 29 என்பவரை காதலித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சுகன்யா மாதவன் இருவரும் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சுகன்யா தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சுகன்யாவின் மாமியார் ராஜலட்சுமி, நாத்தனார் அமுதா ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி சுகன்யாவிடம் சண்டை போடுவதுடன் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
![வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார்; ஊர் மக்களுடன் போராட்டத்தில் குதித்த மருமகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/03/04888b830825da2d50c4c75e2b2837421683122365270113_original.jpg)
இதனையடுத்து வேறு வழியின்றி பெற்றோர் வீட்டிற்கு சென்று வரதட்சனை குறித்து சுகன்யா பேசியுள்ளார். அதற்கு சுகன்யாவின் பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்ட உனக்கு பணம் கொடுக்க இயலாது என்று கூறி வீட்டை விட்டு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கணவர் வீட்டிற்கு வந்த சுகன்யாவை வரதட்சணை வாங்கி வந்தால் தான் உள்ளே அனுமதிப்போம் என்று கூறியதால் சுகன்யா கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தின் போது சுகன்யாவின் மாமியார் வீட்டிற்குள் உள் தப்பாளிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுகன்யாவிற்கு ஆதரவு தெரிவித்து அந்த ஊர் பொதுமக்களும் அவருடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் இது குறித்து இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். காதலித்து திருமணம் செய்த பெண்ணை வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் நிராகரித்ததால் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion