மேலும் அறிய

குறுவை காப்பீடு செய்ய அனுமதி - திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

5 லட்சம் ஏக்கரில் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி செய்து வருகிறார்கள். காப்பீடு செய்ய முடியாமல் பருவம் மாறி பெய்யும் பெரும் மழையால் குறுவையும் அழிந்து போகும் என்கிற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

குறுவை காப்பீடு செய்ய அனுமதி வழங்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் செய்தனர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ள மாநிலத் தலைவர் பி.ஆர் பாண்டியன் செய்தியாளர் இடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் இரண்டாவது ஆண்டாக குறுவை பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ஜூலை 30க்குள் பிரீமியம் செலுத்துவதற்கான இறுதி கெடு முடிவடைய உள்ள நிலையில் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். முன் பட்ட குறுவை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையில் அடிபட்டு ஆங்காங்கே விவசாயிகள் கவலையில் உள்ளார்கள். தற்போது 5 லட்சம் ஏக்கரில் காவிரி டெல்டாவில் மட்டும் குறுவை சாகுபடி செய்து வருகிறார்கள். காப்பீடு செய்ய முடியாமல் தொடர்ந்து பருவம் மாறி பெய்யும் பெரும் மழையால் குறுவையும் அழிந்து போகும் என்கிற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். குறுவை காப்பீடு செய்ய இரண்டாவது ஆண்டாக இதுவரையிலும் தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிடவில்லை. 

குறுவை காப்பீடு செய்ய அனுமதி  - திருவாரூர்  ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

வேளாண் துறையில் கேட்டால் நாங்கள் காப்பீட்டு நிறுவனத்துக்கு டெண்டர் வைத்து தமிழக அரசின் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளோம். விரைவில் அனுமதி வந்துவிடும் என்கிற பதில் வருகிறதே தவிர இதுவரையிலும் அதற்கான எந்த அறிவிப்புகளும் தமிழக அரசு வெளியிடவில்லை. பிரீமியம் செலுத்துவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் நிலுவையில் உள்ள நிலையில் இதுகுறித்து தமிழக. முதலமைச்சர் உடனடியாக காப்பீடு செய்வதற்கான அனுமதி வழங்கி உரிய கால நீட்டிப்பு வழங்கி பிரீமியம் செலுத்த அனுமதிக்க வேண்டும். காப்பீடு திட்டம் என்பது கலைஞர் அவர்களால் 1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதனை திமுக தலைமையிலான அரசு இரண்டாவது ஆண்டாக அபகரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். தேர்தல் வாக்குறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2,500 தருகிறோம் என்று சொன்னீர்கள். இதுவரையிலும் இரண்டாவது ஆண்டாக ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள்.  உடனடியாக செப்டம்பர் 1 முதல் குவிண்டால் 1 க்கு ரூபாய் 2500 கொடுத்து கொள்முதல் செய்ய முன் வர வேண்டும். 

குறுவை காப்பீடு செய்ய அனுமதி  - திருவாரூர்  ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

தமிழகம் முழுமையிலும் மிகப் பெரிய அளவில் உர விற்பனையில் குளறுபடிகள் தொடர்கிறது. ஸ்பிக் நிறுவனம் ஒரு மூட்டை யூரியா 270 ரூபாய் விலை நிர்ணயம் செய்து விட்டு அதோடு இணை இடுபொருளாக 730 ரூபாய் கொடுத்து ஒரு மூட்டை வாங்க வேண்டும் என்று கட்டாயம் செய்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்து 1 மூட்டை யூரியா வாங்க வேண்டிய நெருக்கடி நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அரசு கண்டுகொள்ள மறுக்கிறது. பல கட்டங்கள் உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்காத நிலை தொடர்கிறது. இதனால் விவசாயிகள் திகைத்துப் போய் உள்ளனர். சம்பா சாகுபடியை துவக்க முடியுமா? என்கிற அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

எனவே உடனடியாக தமிழக அரசு ஸ்பிக் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகள் விரும்பும் உரத்தை அரசு நிர்ணயித்த விலையில் வழங்க வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரப்பத சதம் 21 ஆக உயர்த்தி நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் உரிய அனுமதி முன் கூட்டி பெற வேண்டும் தடை இல்லாமல் கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி முதலமைச்சருக்கு கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் மூலமாக அனுப்பி வைத்துவிட்டு, காப்பீடுக்கான அனுமதி கிடைக்கிற வகையிலும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என அமர்ந்திருக்கிறோம் என்று கூறினார். இந்த காத்திருப்பு போராட்டத்தில்  100 க்கும் மேற்பட்ட மாவட்டம் முழுவதுமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர் குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Embed widget