மேலும் அறிய

9 ஆண்டாக கட்டப்படாத ரயில்வே மேம்பாலங்கள் - போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் 4 மாவட்ட மக்கள்

ஒன்பது ஆண்டுகளாக கட்டப்படாத ரயில்வே மேம்பாலங்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் 4 மாவட்ட மக்கள்.

நாகை-தஞ்சை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகை-தஞ்சை இடையே முக்கிய பகுதியாக இருப்பது திருவாரூர் மாவட்டம் உள்ளது. மேலும் இந்த சாலையில் திருவாரூர் மாவட்டத்தில் தான் 4 ரயில்வே கேட்டுகள் உள்ளன. இதேபோல் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் பேரளத்தில் ஒரு ரெயில்வே கேட்டும், திருவாரூர்-மன்னார்குடி பாதையில் சிங்களாஞ்சேரியில் ஒரு ரயில்வே கேட்டும் அமைந்துள்ளது. இந்த 6 ரெயில்வே கேட்டுகள் அவ்வப்போது மூடப்படும் நிலையில் போக்குவரத்து என்பது ஸ்தம்பிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில அமைந்துள்ள நீடாமங்கலம் ரெயில்வே கேட் என்பது நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த பாதையில் மன்னார்குடியில் இருந்து சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் ரெயில்கள் நீடாமங்கலம் ரெயில்வே கேட்டில் ரெயில் என்ஜின் திசை மாற்றப்பட்டு இயக்கப்படும் சுழ்நிலை நிலவுகிறது. மேலும் சரக்கு ரெயில் போக்குவரத்து, திருச்சி, எர்ணாகுளம் போன்ற பகுதிக்கு செல்லும் ரெயில்களால் ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் இந்த ரெயில்வே கேட் அடிக்கடி அரை மணி நேரத்திற்கு மேலாக மூடப்படும்.


9 ஆண்டாக கட்டப்படாத ரயில்வே மேம்பாலங்கள் - போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் 4 மாவட்ட மக்கள்

ரெயில்வே கேட்டுகளில் சிக்கும் வாகனங்கள், அதில் பயணம் செய்பவர்கள் சொல்ல முடியதா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த வழிபாதை வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற முக்கிய ஸ்தலங்களுக்கும் செல்வதால் எந்த நேரமும் வாகன போக்குவரத்து என்பது அதிகமாக இருக்கும்.  அவசர ஆபத்து காலங்களில் எந்த திசையில் செல்ல முடியாமல் போக்குவரத்தில் சிக்கும் அவலநிலை இருந்து வருகிறது. இந்த சுழ்நிலையில் கடந்த 2013 ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் ரெயில்வே நிலையம் அருகில், மயிலாடுதுறை சாலையில் பேரளம் ரெயில் நிலையம் அருகில், திருவாரூர் மன்னார்குடி சாலையில் சிங்களாஞ்சேரி ரெயில் கேட் அருகில் என 3 மேம்பாலம் கட்டப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் 3 ரெயில்வே மேம்பாலமும் கட்டப்படாமல் இருந்து வருகிறது.


9 ஆண்டாக கட்டப்படாத ரயில்வே மேம்பாலங்கள் - போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் 4 மாவட்ட மக்கள்

குறிப்பாக காரைக்கால்-தஞ்சை வழி பிரதான ரெயில் பாதையாக இருப்பதால் பயணிகள் ரெயில், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரெயில் மற்றும் பருவ காலத்தில் பொது விநியோக திட்டத்திற்காக நெல், அரிசி ஏற்றி செல்லும் சரக்கு என ரெயில் போக்குவரத்து மிகுந்த பாதையாக இருந்து வருகிறது. இதனால் கால நேரத்தை கணக்கிட முடியாத நிலையில் சரக்கு ரெயில் போக்குவரத்து இருப்பதால் ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி அடைக்கப்படுவதால் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருவாரூர்-மன்னார்குடி சாலையில் ரெயில்வே மேம்பாலம் கடந்த 2013 ஆண்டு ரூ.27 கோடி 6 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனையடுத்து ரெயில்வே நிர்வாகம் உடனியாக தண்டவாள பாதையில் பாலம் கட்டும் பணியினை தொடங்கி நிறைவு செய்தது. இந்த பாலம் கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் இணைப்பு சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணியினை முடிக்கப்படவில்லை. இதன் காரணமாக ரெயில்வே துறையால் கட்டப்பட்ட பாலம் அந்தரத்தில் தொங்கும் நிலையில் இருந்து வருகிறது. இதேபோல் திருவாரூர்-மயிலாடுதுறை மாவட்டத்தை இணைக்கும் பேரளம் ரெயில் மேம்பாலம் கட்டும் பணிகள் முற்றிலும் நடைபெறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக மிக முக்கியமான நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் என்பது பிரதான கடைவீதி சாலையில் அமைந்துள்ளதால் நிலம் கையகப்படும் பணிகளில் பல்வேறு சிக்கல் நிலவி வருகிறது. இது போன்ற பல்வேறு காரணங்களால் சாலை மார்க்கமாக பயணம் செய்யும் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய டெல்டா மாவட்ட மக்கள் நாள்தோறும் ரெயில்வே கேட்டுகள் மூடப்படுவதால் அவதியடைந்து வருகின்றனர். எனவே திருவாரூர் மாவட்டத்தில் பிரதான 3 ரெயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணிகளில் உள்ள பிரச்சனைகளை கலைந்து, மேம்பாலம் விரைந்து அமைத்தால் தான் திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாதுறை டெல்டா மாவட்டத்திற்கு விடியல் பிறக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு சூப்பர் வாய்ப்பு! சிறப்பு கடன் முகாம்... எங்கே? எப்போது?
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு சூப்பர் வாய்ப்பு! சிறப்பு கடன் முகாம்... எங்கே? எப்போது?
ஆலக்குடியில் பெயர் பலகைக்கு வந்த சோதனை! போஸ்டர்களால் முழுவதும் மறைப்பு... வழிதெரியாமல் தவிக்கும் பயணிகள்
ஆலக்குடியில் பெயர் பலகைக்கு வந்த சோதனை! போஸ்டர்களால் முழுவதும் மறைப்பு... வழிதெரியாமல் தவிக்கும் பயணிகள்
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி! தான் படித்த பள்ளிக்கு ரூ.4 கோடி கொடுத்த தொழிலதிபர்
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி! தான் படித்த பள்ளிக்கு ரூ.4 கோடி கொடுத்த தொழிலதிபர்
குவாரிகளில் 6 வீல் லாரிகளுக்கு மணல் ஏற்ற மறுப்பா? நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை
குவாரிகளில் 6 வீல் லாரிகளுக்கு மணல் ஏற்ற மறுப்பா? நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget