மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் தொடங்கப்பட்ட பசுந்தீவன அபிவிருத்தி திட்டம் - தீவன தட்டுப்பாட்டை குறைக்க உதவுமா?
மானாவாரியாக பசுந்தீவனப்புற்கள், தீவனப்பயிர்கள், தீவன மரங்கள் உற்பத்தி செய்து சுற்று கிராமங்களும், மாவட்டத்தின் பசுந்தீவனத் தேவையைத் தீர்க்கும் வகையில் முன் மாதிரியாக அமைக்கப்படவுள்ளது.
பசு தீவன அபிவிருத்தி திட்டம் மற்றும் கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற பசு தீவன அபிவிருத்தி திட்டம் மற்றும் கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், முத்துப்பேட்டை ஒன்றியம், மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் தமிழக அரசு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 10 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு மானாவாரியாக பசுந்தீவனப்புற்கள், தீவனப்பயிர்கள், தீவன மரங்கள் உற்பத்தி செய்து சுற்று கிராமங்களும், மாவட்டத்தின் பசுந்தீவனத் தேவையைத் தீர்க்கும் வகையில் முன் மாதிரியாக அமைக்கப்படவுள்ளது. பெரிய அளவிலான புல் பாத்திகள் ஓராண்டுக்கு கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படவுள்ளது.
நிலத்தினை சீர்படுத்தி, பண்படுத்தி தேவையற்ற புல் பூண்டுகளை அகற்றி பாத்திகள் அமைப்பது முதல் தீவன மரம், புல் பயிர் நர்சரிகள் ஏற்படுத்தி மழைக்குமுன் விதைப்பது போன்று பணிகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாட்களை கொண்டு மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையினர்களுக்கு ஏக்கருக்கு 3.68 இலட்சம் வீதம் 10 ஏக்கருக்கு 36.80 இலட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை தேவையான தீவன மர, புல் விதைகள் வாங்கவும், வேளாண் பொறியியல் துறை மூலம் நிலத்தை உழுது பண்படுத்தவும் ஏக்கருக்கு 16500 வீதம் 10 ஏக்கருக்கு 1.65 இலட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது முற்றிலும் பசுந்தீவனத் தேவையைப் பூர்த்தி செய்யும் உயிரிய நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளித்து பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், மேலநம்மங்குறிச்சி கிராமம் முத்துப்பேட்டை பஞ்சாயத்தில் மாவட்டத்தின் எல்லையோரப் பகுதியாக இருந்தாலும், இங்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கறவை பசுக்கள் வழங்கப்பட்டு ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கமும் இயங்கி வருகிறது. கால்நடைகளுக்கு மழைக்காலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாடுகளுக்கு கோமாரி, சப்பை நோய், தொண்டை அடைப்பான், நோய் தடுப்பூசிகளும், குடற்புழு நீக்க மருந்துகளும், ஆடுகளுக்கு வரும் பிபிஆர், துள்ளுமாரி நோய்களுக்கான தடுப்பூசிகள், மலடு நீக்க சிகிச்சை, செயற்கை கருவூட்டல், உண்ணி நீக்க மருந்துகள் வழங்கல் போன்ற அத்தியவாசப் பணிகள் மாவட்ட முழுவதும் கிராமந்தோறும் முகாம் மூலம் நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்டமாக இங்கு மேலநம்மகுறிச்சியில் கால்நடை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்திரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குநர் தனபாலன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion