மேலும் அறிய

'அரசு எனக்காக இதை மட்டும் செய்தால் போதும்' - ஆட்டோ ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண் அரசுக்கு வைத்த கோரிக்கை

ஆட்டோ ஓட்டும் பட்டதாரி மாற்றுத்திறனாளி பெண். ஓட்டுனர் உரிமம் வழங்கி உதவ வேண்டும் என அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை.

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் தன்னம்பிக்கையுடன் பேருந்து உள்ளிட்ட இதர சரக்கு வாகனங்களை இயக்க முன்வருவதை பரவலாக காண முடிகிறது. இருப்பினும் மாற்றுத்திறனாளிகளில் ஆண்கள் சிலர் ஓட்டுநராக இருந்து வரும் நிலையில் முதல் முறையாக திருவாரூரில் பட்டதாரி மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டி சொந்தக் காலில் நிற்க துடிக்கிறார். அதேசமயம் தனக்கு ஓட்டுனர் உரிமம் தர அரசு முன்வர வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கிறார்.
 
திருவாரூர் மாவட்டம் புதுப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் ராஜலட்சுமி தம்பதியினரின் கடைசி மகள் அபிராமி வயது 36. ராஜேந்திரன் ஜோதிடராக இருந்து வந்துள்ளார். தனது மூன்று மகள்களில் இரண்டு மகள்களை அவர் திருமணம் செய்து வைத்த நிலையில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார்.

அரசு எனக்காக இதை மட்டும் செய்தால் போதும்' - ஆட்டோ ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண் அரசுக்கு வைத்த கோரிக்கை
 
அபிராமிக்கு இரண்டு வயதில் போலியோ தாக்குதல் ஏற்பட்டு அவரது இரண்டு கால்களும் செயலிழந்துள்ளது. இருப்பினும் அவரை அவரது தந்தை எம்.காம் வரை படிக்க வைத்துள்ளார். அபிராமி கோயம்புத்தூர், திருவாரூர் உள்ளிட்ட பல இடங்களில்  தனியார் நிறுவனங்களில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். ஆனால் அங்கு தனக்குரிய கழிவறை வசதி போன்றவை சரியாக இல்லாத காரணத்தினால் சுயத் தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்து வேலையை விட்டு நின்றுள்ளார்.
 
இதனையடுத்து அபிராமி ஆட்டோ ஓட்டி சம்பாதித்து தன்னையும் தனது தாயையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையின் காரணமாக ஆட்டோ வாங்கி ஓட்ட முடிவெடுத்துள்ளார். அதற்காக மாவட்ட தொழில் மையத்தில் கடனுக்காக அலைந்து திரிந்துள்ளார். அங்கிருந்து வங்கிக்கு அவரை அனுப்பி உள்ளனர். வங்கியில் உரிமம் இருந்தால்தான் ஆட்டோ வாங்க லோன் தர முடியும் என தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அபிராமி சென்றுள்ளார். அங்கு ஆட்டோவில் கையால் பிரேக் போடுகிற அமைப்பு இருப்பதால் அதற்குரிய சான்றிதழை வாங்கி வந்தால் மட்டுமே உரிமம் வழங்க முடியும் எனக் கூறியதால் அவருக்கு ஆட்டோ ஓட்ட வேண்டும் என்கிற கனவு சுக்கு நூறாகிகியுள்ளது. இது குறித்து அவர்  இணையத்தில் தேடி பார்த்தும் பலரிடம் விசாரித்தும் பார்த்ததில் அப்படி ஒரு சான்றிதழ் எங்கும் வழங்கப்படவில்லை என்பதும் அவருக்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இருப்பினும் மனம் தளராத அபிராமி தனது சின்ன அக்கா ராணிடம் தனக்கு உதவ கேட்டுள்ளார். தொடர்ந்து அவர் அக்கா ராணி மற்றும் பக்கத்து வீட்டு பெண் ராஜி அபிராமியின் நண்பர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து 40 ஆயிரம் ரூபாய் முன் பணம் கட்டி ஆட்டோ ஒன்றை எடுத்துக் கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கான மாதத் தவணை ஒன்பது ஆயிரம் ரூபாயை நான்கு வருடங்களுக்கு அபிராமி சம்பாதித்து கட்டிக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு எனக்காக இதை மட்டும் செய்தால் போதும்' - ஆட்டோ ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண் அரசுக்கு வைத்த கோரிக்கை
 
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக திருவாரூரில் அவர் ஆட்டோவை ஓட்டி வருகிறார். அவருக்கு பொதுமக்கள் அமோக ஆதரவளித்ததில் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு சவாரி அவருக்கு வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் தனக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாததால் தன்னால் தன்னம்பிக்கையுடன் தைரியமாக வெளியிடங்களுக்கு சவாரி எடுத்துச் செல்ல முடியவில்லை என்றும் இதனால் தனது வாழ்வாதம் பாதிக்கப்படும் என்றும் வயதான தாயுடன் வசித்து வரும் தான் அவருக்கு பிறகு தனது வாழ்க்கையை நடத்திக் கொள்வதற்கு இந்த ஆட்டோ உறுதுணையாக இருக்கும் என்றும் எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்றும் நான் ஆட்டோ ஓட்டுவதை பரிசோதித்து  பார்த்துவிட்டு தனக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கினால் போதுமானது என்றும் அதை தவிர வேறு எந்த உதவியையும் நான் கேட்கவில்லை என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கிறார்.
 
கை, கால்கள் நல்ல நிலையில் உள்ளவர்களே உழைக்க சோம்பேறித்தனப்படும் இந்த காலகட்டத்தில் இரண்டு கால்களும் செயலிழழந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து முன்னேற வேண்டும் என்று மாற்றுத் திறனாளி பட்டதாரி பெண்ணான அபிராமி ஆட்டோ வாங்கி ஒட்டி சம்பாதித்து வருவது இப்பகுதி மக்களிடையே பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் அதே சமயம் அவர்களின் பாராட்டுகளையும் அபிராமிக்கு பெற்றுத் தந்துள்ளது. எனவே அரசு அபிராமிக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க நடவடிக்கை இருப்பதன் மூலம் அவருக்கு மட்டுமல்லாமல் அவரைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுகும் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget