மேலும் அறிய

திருவாரூரில் 4759 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பார்வையற்றோருக்கான கைக்கடிகாரம் மற்றும் பிரெய்லி மூலம் வாசிக்கும் கருவி ஊன்றுகோல், இலவச தையல் இயந்திரம் உட்பட மொத்தம் 18 வகையான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 4759 மாற்று திறனாளிகளுக்கு 3 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் விவசாயிகள், பெண்கள், மாணவ-மாணவிகள் என பலரும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளரச் செய்து சமுதாயத்தில் சம வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்ற வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மூன்றாம் பாலினத்தவர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களுக்கு திருநங்கை என்று பெயர் சூட்டியது போன்று ஊனமுற்றோர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் அடிப்படையில் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மனவளர்ச்சி குன்றியோர் கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் பார்க்கின்சன் நோய் தண்டுவட மரபு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புகுள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 4709 பயனாளிகளுக்கு மாதம் தலா 1500 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

திருவாரூரில் 4759 மாற்றுத் திறனாளிகளுக்கு  ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

இதுமட்டுமின்றி சிறுகுறு நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஐந்து வயதுக்குட்பட்ட மாற்று திறன் குழந்தைகளுக்கு மதியம் ஊட்டச்சத்து சத்துணவு வழங்கும் திட்டம் மற்றும் ஆறு வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றியோர்க்கான மற்றும் காதுகேளாதவர்களுக்கான ஆரம்பகால பயிற்சி மையமும் நடத்தப்பட்டு வருகிறது.  மேலும் பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, கருப்பு கண்ணாடி, பார்வையற்றோருக்கான கைக்கடிகாரம் மற்றும் பிரெய்லி மூலம் வாசிக்கும் கருவி ஊன்றுகோல், செயற்கை கை, கால்கள், காதொலி கருவி, இலவச தையல் இயந்திரம் உட்பட மொத்தம் 18 வகையான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

திருவாரூரில் 4759 மாற்றுத் திறனாளிகளுக்கு  ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் 

மேலும் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் பொருட்கள் விற்பனை மையம் அமைப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர் கூட்டமும் 15 நாட்களுக்கு ஒரு முறை கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலவாரியமும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இந்த துறையின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 4759 பயனாளிகளுக்கு 3 கோடியே 81 லட்சத்து 7665 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தமிழக முதல்வருக்கு மாற்றுத்திறனாளி பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget