எச்சரிக்கை விடுக்கும் கையும்... மிரள வைக்கும் போஸ்டரும்: அதிர்கிறது தஞ்சாவூர் அரசியல் களம்: என்ன விஷயம் தெரியுங்களா?
முதல்வர் அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இன்று வரை இதுதான் தமிழ்நாடு முழுவதும் ஹாட் டாபிக்காக இருக்கு. மற்ற அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆப்பு வைக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்: மிரட்டும் போஸ்டரால் மிரண்டு போய் உள்ளனர் எதிர்கட்சிகள் என்று மகளிரே பேசும் அளவிற்கு தஞ்சை அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது ஒரு போஸ்டர். தஞ்சை திமுக மாநகர செயலாளரும், மேயருமான சண்.ராமநாதன் ஒட்டியுள்ள போஸ்டர்தான் அது.
அரசியல் களத்தில் மகளிர் உரிமைத் தொகைதான் இப்போது செம ஹாட் டாபிக். காலையில் கண்விழித்த போது வந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் தமிழ்நாட்டு பெண்கள் மீளவே இல்லை. அட ஆமாங்க ரூ.5,000 வங்கியில் வரவு வைத்து முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’தான். இதுதான் இப்போ அரசியல் அரங்கை ஒரு கலக்கு கலக்கி வருகிறது. இதற்கு மேலும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று கொடுத்தார் பாருங்க வாக்குறுதி. இது நம்ம லிஸ்ட்டுலேயே இல்லையே என்று மற்ற அரசியல் கட்சிகள் அதிர்ந்து போய் உள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.31 கோடி பேருக்கு கடந்த 13ம் தேதி இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மூன்று மாதத்துக்கான முன்பணம் மற்றும் கோடைகால சிறப்புத் தொகையும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத் தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. மகளிரின் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்.
‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி. வெல்வோம் ஒன்றாக என்ற முதல்வர் ஸ்டாலினின் பதிவு வைரலானது.
கடந்த 2023-ல் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளன்று ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடங்கியது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திமுக அறிவித்த ஏழு முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. அப்போது 1 கோடியே 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தின் பயனாளிகளாக இருந்தனர்.
இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பரில் 16,94,339 பயனாளிகள் சேர்க்கப்பட்டு திட்டம் விரிவு செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் பயனாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சத்து 69,831 என தற்போது உள்ளது. இவர்கள் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைத்த பின்னரே முதல்வர் அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இன்று வரை இதுதான் தமிழ்நாடு முழுவதும் ஹாட் டாபிக்காக இருக்கு. மற்ற அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆப்பு வைக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்தான் தஞ்சாவூர் நகர் முழுவதும் திமுக தஞ்சை மாநகர செயலாளரும், மேயருமான சண்.ராமநாதன் ஒட்டிய போஸ்டர் அரசியல் அரங்கை அதிர விட்டுள்ளது. ஆமாங்க. எஸ் என்கிற ஆங்கில எழுத்துடன் கூடிய கை எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் நீ ஆயிரம் ரூபாயை நிறுத்த முயற்சித்தால் நான் என் மக்களுக்கு 5000 ஆயிரமாக தருவேன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற வாசகத்துடன் மற்ற கட்சியினருக்கு அதிர்வை கொடுக்கும் வகையில் உள்ளது. இந்த போஸ்டர் தஞ்சை நகரின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.























