மேலும் அறிய

தனது போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தவர் தில்லையாடி வள்ளியம்மை - மகாத்மா காந்தியடிகள்

தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் தில்லையாடியில் உள்ள நினைவு மணி மண்டபத்தில், வள்ளியம்மை சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த தில்லையாடியை பூர்வீகமாக கொண்ட முனுசாமி - மங்கம்மாள் தம்பதிக்கு, தென் ஆப்பிரிக்காவில் ‘ஜோகன்னஸ்பர்க்’ நகரில் 1898 -ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் தேதி வள்ளியம்மாள் பிறந்தார். தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு ஆங்கிலேயரால் விதிக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளை எதிர்த்து, 1913 -ல் காந்தியடிகள் போராட்டங்கள் நடத்தினார். காந்தியின் சொற்பொழிவுகள் சிறுமி வள்ளியம்மையின் மனதில் ஆழமாக பதிந்து, விடுதலைக் கனலை மூட்டின. அதனை தொடர்ந்து சிறுமியான வள்ளியம்மை காந்தி நடத்திய போராட்டங்களில் பங்கேற்க தொடங்கினர். 

தனது போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தவர் தில்லையாடி வள்ளியம்மை - மகாத்மா காந்தியடிகள்

ஆங்கிலேய அதிகாரி ஒரு முறை காந்தியை நோக்கி துப்பாக்கியை நீட்டினார். அப்போது முதலில் என்னை சுடு பார்க்கலாம் என முன்வரிசையில் நின்றார் வள்ளியம்மை. கிறிஸ்தவச் சடங்கு திருமணங்கள் மட்டுமே செல்லும், பதிவு செய்யப்படும் என்ற சட்டத்தை, எதிர்த்து ஜோகன்னஸ்பர்க்கில் போராட்டம் நடத்திய மகளிர் சத்தியாகிரகப் படையினருக்கு வள்ளியம்மை தொண்டு செய்தார். தடையை மீறி போராடியதற்காக 3 மாதம் சிறையா? அபராதம் செலுத்தி விடுதலையா? என்ற போது, பணம் செலுத்துவது சத்தியாகிரகத்துக்கு இழுக்கு என துணிச்சலுடன் மறுத்து சிறைக்குச் சென்றார்.

தனது போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தவர் தில்லையாடி வள்ளியம்மை - மகாத்மா காந்தியடிகள்

ஒரு கொடி கூட இல்லாத கூலிகளுக்கு இவ்வளவு வெறியா? என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, ‘இதுதான் எங்கள் தேசியக் கொடி’ என்றார். சுகாதாரமற்ற சூழல், அதிகப்படியான சிறைப்பணியால் வள்ளியம்மை உடல்நலம் பாதிக்கப்பட்டது. முன்கூட்டியே விடுதலை பெற வாய்ப்பு கிட்டியபோதும், அதனை ஏற்க மறுத்தார். சிறையில் இருந்து விடுதலை ஆன 10 நாட்களில் தில்லையாடி வள்ளியம்மை, 1914 பிப்ரவரி 22 -ம் தேதி இதே நாளில், தனது பிறந்த நாளிலேயே மறைந்தார்.

தனது போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தவர் தில்லையாடி வள்ளியம்மை - மகாத்மா காந்தியடிகள்

இந்தியாவின் ஒரு புனித மகளை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் கடமையைச் செய்தவர் வள்ளியம்மை என்றும், வள்ளியம்மை மனோபலம், தன்மானம் மிக்கவர் என்றும், அவரது தியாகம் இந்திய சமூகத்துக்கு நிச்சயம் பலன் தரும் என்றும் தனது இரங்கல் செய்தியில் மகாத்மா காந்தி குறிப்பிட்டார். ஒரு முறை தில்லையாடிக்கு வந்த காந்தி, அந்த ஊர் மண்ணை கண்ணில் ஒற்றிக்கொண்டு கண்கலங்கினார். ‘பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மைதான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டினார் என புகழ்ந்தார்.

தனது போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தவர் தில்லையாடி வள்ளியம்மை - மகாத்மா காந்தியடிகள்

வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில், தில்லையாடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பொது நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. 16 -வது வயதிலேயே ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து சரித்திரத்தில் இடம் பிடித்தார் தமிழ் இன வீரமங்கை வள்ளியம்மை. அவரின் நினைவு தினம் ஆண்டுதோறும் தில்லையாடியில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டபத்தில் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தில்லையாடி வள்ளியம்மையின் 109 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கபட்டது. இதனை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள வள்ளியம்மை நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.

தனது போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தவர் தில்லையாடி வள்ளியம்மை - மகாத்மா காந்தியடிகள்

மேலும், செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட ஒன்றிய உறுப்பினர் துளசிரேகா, தில்லையாடி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தில்லையாடி வள்ளியம்மை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர். பின்னர் மணிமண்டத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்று, ஆவணங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு அவற்றின் விளக்கத்தை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவை போற்றும் விதமாக தில்லையாடியிலிருந்து மயிலாடுதுறை வரையிலான தியாகச்சுடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
Embed widget