மேலும் அறிய

கொள்ளிடம் ஆற்றில் இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைப்பதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

4 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு நல்ல மழை பெய்த காரணத்தால் ஆற்றில் தண்ணீர் உள்ளது. இதனால் மீண்டும் பம்ப் ஹவுஸ் அமைக்க போர்வெல் போட்டு வருகின்றனர். இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைத்தால் தட்டுப்பாடு ஏற்படும்

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  இதனால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை சேர்ப்பித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டம் திருச்சினம்பூண்டியை சேர்ந்த கிராம பொதுமக்கள் அளித்த மனுவில்,திருச்சினம்பூண்டி ஊராட்சிக்கு எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒரு பெரிய  நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நிமிடத்திற்கு 15 ஆயிரம் லிட்டர் வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. மேலும் இந்த கொள்ளிடம் ஆற்றில் மூன்று முறை மணல் குவாரி அமைத்து இங்கிருந்து பெருமளவில் மணல் எடுக்கப்பட்டதால் ஆற்றில் 15 அடி பள்ளம் ஏற்பட்டுவிட்டது.


கொள்ளிடம் ஆற்றில் இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைப்பதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அதன் காரணமாக இப்பகுதியில் உள்ள கைப் பம்புகள், விவசாய மோட்டார்கள் நீரின்றி மீண்டும் 60 அடி முதல் 100 அடி ஆழம் வரை சென்றதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான காய்ப்பு மரங்கள்  பட்டு போய்விட்டன.கொள்ளிடம் ஆறு இரண்டுமுறை நீரின்றி வறண்டு மீன் வளமும் அழிந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு காலப் கட்டத்தில் குவாரி மற்றும் மற்றொரு பம்ப் ஹவுஸ் அமைக்க அரசு மேற்கொண்ட முயற்சியை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது. 2019 ம் ஆண்டில் இங்கிருந்த மணல்குவாரியும் எடுக்கப்பட்டது.


கொள்ளிடம் ஆற்றில் இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைப்பதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை
தற்போது 4 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு நல்ல மழை பெய்த காரணத்தால் ஆற்றில் தண்ணீர் உள்ளது. இதனால் மீண்டும் பம்ப் ஹவுஸ் அமைக்க போர்வெல் போட்டு வருகின்றனர். இந்த இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைக்கப்பட்டு நீர் உறிஞ்சப்பட்டால் எங்கள் வளமான பகுதி நிச்சயம் பாதித்து தண்ணீர் தட்டுப்பாட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க இரண்டாவது கௌஸ் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


கொள்ளிடம் ஆற்றில் இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைப்பதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

 இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,கொள்ளிடம் ஆற்றில் ராட்ஷத பம்ப் அமைக்க கூடாது என பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அதன் குவாரி அமைக்க கூடாது எனவும் தெரிவித்தோம். இந்நிலையில், இரண்டாவதாக ராட்ஷத பம்ப் அமைத்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விடும். முதல் முறை போடப்பட்ட ராட்ஷத பம்பால் தற்போது நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இதனால் வருங்காலங்களில் விவசாயம் பாதிக்கும். ஆறுகளில் ராட்ஷத பம்ப் பொருத்தினால் சுமார் 10 கிலோ மீட்டர் துாரத்திற்கு வேறு எங்கும் பம்ப் அமைக்க கூடாது. ஆனால் விதியை மீறி அமைத்து வருகின்றார்கள். உடனடியாக பம்ப் அமைக்கும் பணியை நிறுத்தாவிட்டால், போராட்டம்செய்யப்படும் என்றனர்

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget