தஞ்சை: மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து பிரேதத்தை கையில் ஏந்தி இந்திய கம்யூ. போராட்டம்...!
உத்தரப்பிரதேசத்தில் 9பேர் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம்
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் பாஜக எம்.பி.க்கு எதிராக கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த விவசாயிகள் மீது, மத்திய அமைச்சருடைய மகன் மற்றும் குண்டர்கள் காரை ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் விவசாயிகளைப் படுகொலை செய்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு பத்திரிக்கையாளரும் பலியாகியுள்ளார். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்தச் செயலை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை கடைத்தெருவில், பிரேதத்தை கையில் வைத்து கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரத்தில் கோயில்களிலும், பள்ளி வாசல்களிலும் வளர்க்கப்படும் உகாய் மரத்தை பற்றி தெரியுமா?
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராஜாராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நாகராஜன் , ராஜாமாணிக்கம் , மகாலிங்கம், ராமலிங்கம் , உத்திராபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கை வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடி முன் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி வீரமோகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு, சமவெளியில் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், தமிழ்நாடு விவசாயிகள் இயக்க தலைவர்கள் மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் பேசிய நிர்வாகிகள், எதிராக போராட வேண்டியது நமது கடமையாகும் மத்திய அமைச்சர் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும், அவருடைய குடும்பத்தினர் மற்றும் சம்மந்தப்பட்ட குண்டர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அலட்சியப்படுத்தி வருவதையும், 305 நாட்களுக்கு மேலாக 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களது உயிர்களை அர்பணித்து டெல்லி எல்லையில் அறவழியில் அமைதியாக போராடி வருகின்றனர்.
அரிவாளால் மிரட்டி போதை மாத்திரைகளை எடுத்து சென்ற இளைஞர்கள்- சிக்கும் போது கால் உடைந்த பரிதாபம்
போராடி வரும் விவசாயிகளின் உண்மையான போராட்டத்தை, வியாபாரிகள் போராட்டம், இடைத்தரகர்கள் போராட்டம், வெளிநாட்டில் தூண்டுதல் போராட்டம், தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் போராட்டம், தீவிரவாதிகள் பின்னணி போராட்டம் என்றெல்லாம் பொய்யான கொச்சையான விமர்சனங்களை மத்திய அரசு அவதூறு பரப்பி உலகில் எங்கும் நடைபெறாத அமைதியான அறவழிப் போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு கீழ்த்தரமான உத்திகளை கையாண்டு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.