மேலும் அறிய

தஞ்சாவூர் : ”மாஸ்க் இல்லையா? உள்ள வராதே!” : கொரோனா விழிப்புணர்வு தரும் தலையாட்டி பொம்மைகள்..

தலையாட்டி பொம்மைக்கு பெயர் பெற்ற ஊர் தஞ்சாவூர். இந்த மண்ணின் மகத்துவத்துக்கு ஏற்ற வகையில் இந்த பொம்மை இங்கு மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவதால், இதற்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வீடுகள், நிறுவனங்களில் வரவேற்பு அரைகளில் அலங்கரித்துக் கொண்டிருந்த "அரை அடி உயரம்" கொண்ட தலையாட்டி பொம்மைகளை 10 அடி உயரத்துக்கு வடிவமைத்து அதனை தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் வைத்து வரவேற்கும் பொம்மைகளாக மாற்றியுள்ளது மாவட்ட நிர்வாகம். 

தலையாட்டி பொம்மைக்கு பெயர் பெற்ற ஊர் தஞ்சாவூர். இந்த மண்ணின் மகத்துவத்துக்கு ஏற்ற வகையில் இந்த பொம்மை இங்கு மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவதால், இதற்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வீடுகள், நிறுவனங்களில் வரவேற்பு அறைகளில் அலங்கரித்துக் கொண்டிருந்த "அரை அடி உயரம்" கொண்ட தலையாட்டி பொம்மைகளை 10 அடி உயரத்துக்கு வடிவமைத்து அதனை தஞ்சாவூர் மாவடத்தின் முக்கிய சாலைகளில் வைத்து வரவேற்கும் பொம்மைகளாக மாற்றியுள்ளது மாவட்ட நிர்வாகம். 
 
இந்த பொம்மைகளை சுவாமிமலையைச் சேர்ந்த சிற்ப கலைஞர் ஒருவர் செய்துவழங்கி வருகிறார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதலில் இந்த பெரிய அளவு தலையாட்டி பொம்மை வைக்கப்பட்டுள்ளதை பார்த்த பல்வேறு தனியார் நிறுவனங்களும், இதே போன்று தங்களது நிறுவனத்தில் வாயில் முன் வைக்க விரும்பி அதற்கான ஆர்டரையும் கொடுத்து வருகின்றனர். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையில் ராஜா, ராணி என இரண்டு உள்ளது. இந்த இரண்டு பொம்மைகளும் தற்போது பிரமாண்டமாக மழை, வெயில் அடித்தாலும், வர்ணம் மாறாமல் இருக்குமாறு பைபரால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
 
கொரோனா விழிப்புணர்வு: மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த பெரியஅளவு தலையாட்டி பொம்மைகளில் " நோ மாஸ்க், நோ என்ட்ரி" என வாசகத்தை மாவட்ட நிர்வாகம் அணிவித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சிற்ப கலைஞர் துரை.ராஜாபீர்பால் கூறுகையில், நான் திருச்சியை பூர்வீகமாக கொண்டாலும், கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் சிற்ப துறையில் படித்துவிட்டு சுவாமிமலையில் வசித்து வருகிறேன். சிலைகள் செய்வது, பெரிய அளவிலான பொம்மைகள் செய்து வருகிறேன். மகாமகத் திருவிழாவின் போது கும்பகோணம் அரசலாற்றின் பாலக்கரையில் சாலையின் இருபுறமும் யானை பொம்மைகளை தயாரித்து நிறுவினேன்.

தஞ்சாவூர் : ”மாஸ்க் இல்லையா? உள்ள வராதே!” : கொரோனா விழிப்புணர்வு தரும் தலையாட்டி பொம்மைகள்..
அதே போல் தஞ்சாவூர் அரண்மனை முகப்பு, தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் யானை பொம்மைகளை தயாரித்து அமைத்துள்ளேன். தஞ்சாவூருக்கென்று பெயர் பெற்று விளங்கும் தலையாட்டி பொம்மைகளை பலரது வீட்டுக்குள்தான் இருக்கிறது. இதன் பாரம்பரியம், கைவினையின் நேர்த்தியை, ஏன் பொதுமக்கள் எல்லோரது பார்வையில் படும்படி பொது இடத்தில் வைக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. இதை தஞ்சாவூர் மாவட்டத்தின் முந்தைய ஆட்சியராக இருந்த கோவிந்தராவிடம் ஒருமுறை கூறியபோது, முதலில் ஒரு பொம்மையை வடிவமைத்து தாருங்கள் பார்ப்போம் என்றர், உடனடியாக ஒரு மாத காலத்தில் 10 அடி உயரத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரித்து கொடுத்தேன். 
 
இதை பார்த்து நன்றாக இருக்கு எனக் கூறியதும், மாவட்டத்தின், மாநகரின் வரவேற்பு எல்லைகள், ரவுண்டானாவில் வைக்க 10 தலையாட்டி பொம்மைகள் செய்து கொடுத்துள்ளேன்.தற்போது இந்த பொம்மைகளை பார்த்துவிட்டு பலரும் பெட்ரோல் பங்க் மற்றும் தனியார் நிறுவனங்களில் வரவேற்பு பொம்மையாக வைக்க விரும்பி அணுகியுள்ளனர். வரவேற்பு அறையில் அரை அடியில் முடங்கி கிடந்த இந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை தற்போது, பிரமாண்டமாய் தயாரித்து தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு உயிர் கொடுத்து வருகிறேன் என்றார். ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒவ்வொரு அடையாளம் அதன் பெருமையை உணர்த்தும் வகையில் இருக்கும். அதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் என்றாலே தஞ்சை பெரிய கோயில், அதற்கு அடுத்தாற்போல் தலையாட்டி பொம்மைதான். விழிப்புணர்வுக்காக பொம்மைகளை பயன்படுத்துவதை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs DC LIVE Score:  முக்கிய விக்கெட்டுகள் போச்சு.. 100 ரன்களை எட்டுமா குஜராத்.. கெத்து காட்டும் டெல்லி!
GT vs DC LIVE Score: முக்கிய விக்கெட்டுகள் போச்சு.. 100 ரன்களை எட்டுமா குஜராத்.. கெத்து காட்டும் டெல்லி!
"தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்" தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்!
Mayiladuthurai Leopard: 16 நாட்களாக போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? - விழுப்புரம் வரை விரிந்த தேடுதல் வேட்டை
16 நாட்களாக போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? - விழுப்புரம் வரை விரிந்த தேடுதல் வேட்டை
Dubai Flood: பேய் மழை! வெள்ளக்காடாக காட்சியளிக்கும் துபாய்! தண்ணீரில் மூழ்கிய ரோல்ஸ் ராய்ஸ்!
Dubai Flood: பேய் மழை! வெள்ளக்காடாக காட்சியளிக்கும் துபாய்! தண்ணீரில் மூழ்கிய ரோல்ஸ் ராய்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Deepan Chakravarthy Interview | செய்தியாளர் to நாடாளுமன்ற வேட்பாளர்..கவனம்பெற்ற இளைஞர் !Annamalai about NEET | ”எங்க உயிரே போனாலும் நீட் ரத்து கிடையாது” ஆவேசமான அண்ணாமலைOpinion Poll | மோடி vs ராகுல்1 ஆளப்போவது யார்? பிரம்மாண்ட கருத்துக்கணிப்புJothimani vs MR Vijayabaskar | ஜெயிலில் செந்தில்பாலாஜி..அடித்து ஆடும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs DC LIVE Score:  முக்கிய விக்கெட்டுகள் போச்சு.. 100 ரன்களை எட்டுமா குஜராத்.. கெத்து காட்டும் டெல்லி!
GT vs DC LIVE Score: முக்கிய விக்கெட்டுகள் போச்சு.. 100 ரன்களை எட்டுமா குஜராத்.. கெத்து காட்டும் டெல்லி!
"தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்" தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்!
Mayiladuthurai Leopard: 16 நாட்களாக போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? - விழுப்புரம் வரை விரிந்த தேடுதல் வேட்டை
16 நாட்களாக போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? - விழுப்புரம் வரை விரிந்த தேடுதல் வேட்டை
Dubai Flood: பேய் மழை! வெள்ளக்காடாக காட்சியளிக்கும் துபாய்! தண்ணீரில் மூழ்கிய ரோல்ஸ் ராய்ஸ்!
Dubai Flood: பேய் மழை! வெள்ளக்காடாக காட்சியளிக்கும் துபாய்! தண்ணீரில் மூழ்கிய ரோல்ஸ் ராய்ஸ்!
Lok sabha Election: ஓய்ந்தது பரப்புரை! முடிவுக்கு வந்த தலைவர்களின் அனல் பறந்த பிரச்சாரம் - ஓட்டுப்போட தயாரான மக்கள்
Lok sabha Election: ஓய்ந்தது பரப்புரை! முடிவுக்கு வந்த தலைவர்களின் அனல் பறந்த பிரச்சாரம் - ஓட்டுப்போட தயாரான மக்கள்
Chiyaan 62 Title:
Chiyaan 62 Title: "வீர தீர சூரன்" அவதாரம் எடுத்த விக்ரம்! சியான் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் ட்ரீட்!
Lok Sabha Elections: உரிமையாக கேட்கிறேன்; நீதியின் பக்கம் நில்லுங்கள்; வரலாறு காணாத வெற்றி வேண்டும்  - முதலமைச்சர் ஸ்டாலின் 
Lok Sabha Elections: உரிமையாக கேட்கிறேன்; நீதியின் பக்கம் நில்லுங்கள்; வரலாறு காணாத வெற்றி வேண்டும்  - முதலமைச்சர் ஸ்டாலின் 
ஆஹா என்ன வரிகள் 4:
ஆஹா என்ன வரிகள் 4: "மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்" பாரம் குறைக்கும் இளையராஜா வரிகள்!
Embed widget