மேலும் அறிய

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தால், நீர் நிலைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படலாம். இதனால் நீர் நிலைகள் பொய்த்து, விவசாயம் பாதிக்கப்படும்.

தஞ்சாவூர்: நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

ஜீவக்குமார்: கோடை சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளதால் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். காவிரி ஆற்றின் நடுவே பல இடங்களில் உருவாகியுள்ள குறுங்காடுகளால் நீரோட்டம் தடைபடுகிறது. குறுங்காடுகளை அகற்ற வேண்டும். செங்கிப்பட்டி பகுதிகளில் நடக்கும் கிராவல் மண் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.  

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தால், நீர் நிலைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படலாம். இதனால் நீர் நிலைகள் பொய்த்து, விவசாயம் பாதிக்கப்படும். எனவே இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: தனியார் உரக்கடைகளில் உரங்களை வாங்கும்போது எந்த சாதி என கேட்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதனால் சாதி மோதல்கள் உருவாக வாய்ப்புள்ளதால், அதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு தொடர்பான அறிக்கைகளை இன்சூரன்ஸ் நிறுவனம் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
100 நாள் வேலைத் திட்டத்தால், விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே விவசாயப் பணிகளுக்கு அவர்களை பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

கோவிந்தராஜ்: கரும்பு சாகுபடி குறைந்து வருவதால், கரும்பு விலையை உயர்த்த வேண்டும். அதே போல் வெட்டுகூலி மானியம் வழங்க வேண்டும்.

மதுக்கூர் சந்திரன்: மதுக்கூர் கல்யாண ஓடை வாய்க்கால்களில் ரெகுலேட்டர்கள் இல்லாமல் ஆங்காங்கே காணப்படுகிறது. எனவே  ரெகுலேட்டர்களை உடன் பொருத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 189 இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கண்காணித்து, குறைகள் ஏதும் இருந்தால் எனது கவனத்துக்கு கொண்டு வந்தால் பணிகள் தரமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்தாண்டு குறுவை சாகுபடி 1.53 லட்சம் ஏக்கரில் நடைபெற்றது. வரும் ஆண்டில் 1.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடை செய்த நெல் பாதுகாப்பாக சேமித்து வைக்க 66 ஆயிரம் டன் கொள்ளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளது. அதனால் இனி நெல் மழை, வெயிலில் சேதமடைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
Embed widget