மேலும் அறிய

தஞ்சாவூர் மக்களுக்கு மகிழ்வூட்டும் செய்தி! அறிவிப்பை வெளியிட்ட மாநகராட்சி மேயர்!

தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா வரும் 8ம் தேதி திறக்கப்படுகிறது என்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா வரும் 8ம் தேதி திறக்கப்படுகிறது என்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூருக்கு புகழ் சேர்க்கும் இடங்களில் சிவகங்கை பூங்காவிற்கு தனி சிறப்பிடம் உண்டு. 20  ஏக்கரில் பரந்து விரிந்த இந்தப் பூங்காவில் மான்கள், மயில், புனுகு பூனை, முயல், நரி போன்றவை வளர்க்கப்பட்டு வந்தன. தஞ்சை மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தலமாக இந்த சிவகங்கை பூங்கா விளங்கி வந்தது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், சிறுவர் ரயில் சிவகங்கை குளத்தில் படகுகள், என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்து வந்தன.

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா புதுப்பிக்கும் பணி நடந்தது. இதனால் இங்கிருந்த விலங்குகள் வேதாரண்யம் மற்றும் சென்னை வனவிலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது திறப்பு விழா காண உள்ளது.

தஞ்சாவூர் மக்களுக்கு மகிழ்வூட்டும் செய்தி! அறிவிப்பை வெளியிட்ட மாநகராட்சி மேயர்!

பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் நடைபாதை வசதி என பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் வாக்கிங் செல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப்பயணிகளின் இந்த சிவகங்கை பூங்கா எப்போது திறக்கப்படும் என்பது தஞ்சை மக்களின் கேள்வியாக தொடர்ந்து இருந்து வந்த நிலையில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் சிவகங்கை பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மேயர் சண். ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மக்கள் விரைவாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிவகங்கை பூங்கா திறப்பு விழா வரும் எட்டாம் தேதி நடக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி இந்த பூங்காவை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைக்கின்றனர். வரும் 8ம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சிவகங்கை பூங்கா வந்துவிடும். பணிகளை துரிதப்படுத்துவதற்காக ஆய்வு மேற்கொண்டோம். சிவகங்கை பூங்காவில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நீச்சல் குளம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரின் ஒப்புதலோடு எளிமையான நுழைவு கட்டணம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பழமையான புராதனமான தொன்மையான நகரம் தஞ்சை மாநகரம். அதில் சிவகங்கை பூங்கா திறப்பு விழா என்பது நேர்த்தியான விஷயம். மாணவ, மாணவிகளுக்கான சலுகை கட்டணமும் உண்டு. திறப்பு விழாவில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் சசிகலா அமர்நாத், உதவி பொறியாளர் ரமேஷ், துப்புரவு அலுவலர்கள் ராமச்சந்திரன், தங்கவேல், துப்புரவு ஆய்வாளர் முகமது ஹனிபா மற்றும் பலர் உடன் இருந்தனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget