Thanjavur Power Shutdown: ஞாபகத்தில் வைச்சுக்கங்க... நாளைக்கு இங்கெல்லாம் மின்தடைங்க...!
Thanjavur Power Shutdown 4-1-205: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை துணை மின்நிலையில் நாளை பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின்தடை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை துணை மின்நிலையில் நாளை பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின்தடை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை (ஜன.4) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்விநியோகம் இருக்காது.
அதன்படி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோப நந்தவனம், சுங்கான்திடல், நாலு கால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேல திருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இபி காலனி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் க.அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.