Thanjavur Power Shutdown: தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்கள் மின்தடை - எந்தெந்த பகுதிகள் தெரியுமா.?
தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதி பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்சார துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதி பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்சார துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக வரும் 9ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், ஞானம் நகர், பைபாஸ், எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லூர், காந்தாவனம், சித்தர்காடு.
ஆலங்குடி, நெல்லித்தோப்பு, கடகடப்பை, தளவாய்பாளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு, கீழ வஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம், ஆனந்த்நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்குமின் வினியோகம் இருக்காது.
அதேபோல் தஞ்சையை அடுத்த பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் வரும் 10ம் தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளமர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை.
சின்னபுலிகுடிக்காடு, நார்த்தேவன்குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சை மாவட்டம் வீரமரசன்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை 8ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பூதலூர், செல்லப்பன்பேட்டை மருதக்குடி, அய்யனாபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரான்புதுக்கோட்டை, இந்தளூர், சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர் ஆகிய பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
இதேபோல் சாமிநாதபுரம், சிவசாமிபுரம், முல்லைக்குடி, திட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்தவீரகண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனப்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலலை தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் குடிநீர் உட்பட தங்களின் தேவைகளை காலை 9 மணிக்குள் முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் காலையிலேயே மின்சாதனப் பொருட்கள் பயன்பாடு இருந்தால் முடித்து கொள்ள வேண்டும். மாலை வரை மின்விநியோகம் இருக்காது என்பதால் முன்கூட்டியே தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.