Thanjavur Power Shutdown: தஞ்சாவூர் அருகே மின்தடை: உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க!!!
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படலாம். இந்த பராமரிப்புப் பணிகள் மின்சார விநியோகத்தின் சீரான செயல்பாட்டிற்கு அவசியமானவை.

Thanjavur Power Shutdown (19.6.25) : தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதி மக்களே வரும் 19ம் தேதி உங்க பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. அரைக்க வேண்டியதை அரைச்சுக்கோங்க. மாலை வரை வியர்க்க போகுதுங்க.
மாதாந்திர பராமரிப்பு பணிகள்
மின்வாரியம் மாதந்தோறும் ஒவ்வொரு பகுதிகளாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படலாம். இந்த பராமரிப்புப் பணிகள் மின்சார விநியோகத்தின் சீரான செயல்பாட்டிற்கு அவசியமானவை. பராமரிப்பு நடைபெறும் நாளையும், நேரத்தையும், பகுதியையும் மின்வாரியம் முன்கூட்டியே அறிவித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்ற காரணம்தான்.
மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் பொதுவாக மின்சார சாதனங்களை ஆய்வு செய்யவும், பழுதுகளை நீக்கவும் மற்றும் மின் விநியோகத்தை சீராக வைத்திருக்கவும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகள் காரணமாக குறிப்பிட்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம்.
பராமரிப்புப் பணிகள் நடைபெறும் போது, மின் விநியோகம் தடைபடும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தங்கள் மின் தேவைகளுக்கு ஏற்ப மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல், அவர்கள் பணிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின் தடை நேரம்
அந்த வகையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் நல்லையன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மாரியம்மன்கோவில் துணை மின்நிலையத்தில் வரும் வியாழக்கிழமை 19ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம் நகர், தளவாய்பாளையம், பைபாஸ், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லிதோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், கோரிகுளம் புதுத்தெரு, பாரதிதாசன் நகர், தில்லைநகர், பனங்காடு, எடவாக்குடி,யாகப்பாசாவடி, அம்மாகுளம், ஆனந்த்நகர், சூரக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 19ம் தேதியை மறந்திடாதீங்க. அப்புறமா வருத்தப்படாதீங்க. மின் சம்பந்தப்பட்ட உங்கள் தேவைகளை முன்கூட்டியே செய்துக்கோங்க மக்களே.





















