400 படங்களை பார்த்து 9 நிமிடத்தில் பெயரை கூறி அசத்தல் - சாதனை படைத்த 3 வயது சிறுமி
தஞ்சையில் நிகழ்த்திய இந்த சாதனை நிகழ்வுக்கு அடுத்ததாக சென்னையில் நடக்கும் கலாம் வேர்ல்டு ரிக்கார்டு 650 எண்ணிக்கையில் கூற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர்: தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் 400 படங்களை பார்த்து அதன் பெயரை பட்பட்டென்று 9 நிமிடத்தில் கூறி லிங்க்கோலன் புக் ஆப் ரெக்கார்டில் உலக சாதனை பதிவை செய்து பொள்ளாச்சியை சேர்ந்த 3 வயது சிறுமி டனுஸ்ரீசிவன்யா அசத்தியுள்ளார்.
இன்று நீ செய்யும் சின்ன சின்ன முயற்சிகள்தான் நாளை வெற்றியின் ஆணி வேர்களாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் நடை போட்டால் நிச்சயம் அது வலுவான வேர்காளாக மாறிவிடும். அடைய நினைக்கும் லட்சியம் வலுவாக இருந்தால் அதை செய்ய முடிக்க வேண்டிய மனோதிடம் தானாகவே நமக்குள் வந்து விடும்.
தன்னம்பிக்கை என்ற ஒன்று நம் வாழ்க்கையின் மிகப் பெரிய முக்கிய அங்கமாகும். திறமையினால் மட்டும் அனைத்து காரியங்களும் கை கூடாது. நம் திறமையுடன் கூடிய நம்பிக்கைதான் அதை செய்து முடிக்க தூண்டுகோலாக இருக்கும். நம்மால் முடியும் என்று நம்புவதுதான் தன்னம்பிக்கையாகும். சாதனைகள் சுலபமாக நடந்து விட்டால் முயற்சி என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமலேயே போய் விடும். எப்போதும் சாதிக்க நினைப்பவர்கள் என்றுமே நம்புவது தன்னம்பிக்கையை மட்டுமே.
யாதும் சாத்தியமே என்று மனதில் திடம் இருந்தால் அதை நீ செய்ய உன்னுள் ஒரு துணிவு வந்தால் போதும் நிச்சயம் வெற்றியை பெரும் வெற்றியாக்கி சாதனைகள் படைக்கலாம். முயற்சியுடன் கூடிய கனவு லட்சியம். முயற்சி திருவினையாக்கும். வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்த பிறகும் இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது. வாழ்க்கை நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டு வரும். உன் வெற்றியை யார் தடுத்தாலும் உனக்குள் இருக்கும் தன்னம்பிக்கை உனக்கு வெற்றியை பெற்றுதரும்.
அதுபோல் சிறு வயதிலேயே ஏராளமான திறமைகளை தன்னுள் கொண்டு சாதனைகள் படைத்து அதற்கான அங்கீகாரத்தையும் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனிடம் இருந்து பெற்றுள்ளார் பொள்ளாச்சியை சேர்ந்த அருண்ராஜ்குமார் – சங்கீதா தம்பதியின் மகள் டனுஸ்ரீசிவன்யா (3) 400 வார்த்தைகளுக்கு உரிய விளக்கத்தை 9 நிமிடத்தில் தெரிவித்து மேயர் சண்.ராமநாதனிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றார். இந்த சிறுமி லிங்க்கோலன் புக் ஆப் ரெக்கார்டில் உலக சாதனை பதிவை செய்துள்ளார். மேலும் வரும் 3ம் தேதி கலாம் புக் ஆப் ரெக்கார்ட்டில் சாதனை பதிவை செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்ல இன்னும் ஏராளமாக விருதும், சான்றிதழும் பெற்றுள்ளார். கோயம்புத்தூரில் மாரத்தான் போட்டியில் பங்கேற்பு, லயன்ஸ் கிளப் மாறுவேட போட்டியில் முதல்பரிசு, பள்ளி அளவில் நடந்த ஓட்டப் போட்டியில் 2ம் பரிசு, திருவள்ளுவர் போல் வேடமணிந்து திருக்குறள் ஒப்புவித்து பரிசு வாங்கி உள்ளார்.
400 படங்களை பார்த்து அதன் பெயரை கூறி தற்போது உலக சாதனை பதிவை நிகழ்த்தி உள்ளார். கடந்த சில மாதங்களாகதான் அருண்ராஜ்குமார் – சங்கீதா தம்பதி தங்களின் குழந்தை டனுஸ்ரீ சிவன்யாவுக்கு படங்களை காண்பித்து அதன் பெயரை கூறி பழக்கப்படுத்தி வந்துள்ளனர். அவ்வாறு ஆரம்பித்த அந்த பழக்கம் தற்போது 400 படங்களை பார்த்து அதன் பெயர்களை 9 நிமிடத்திற்குள் கூறும் அளவிற்கு சாதனையாளராக மாற்றியுள்ளது. இந்த சாதனை நிகழ்ச்சியின் போது சிறுமி பட்பட்டென்று சரவெடியாக படங்களை பார்த்து பெயரை கூறி தன் திறமையை வெளிப்படுத்தினார். தஞ்சையில் நிகழ்த்திய இந்த சாதனை நிகழ்வுக்கு அடுத்ததாக சென்னையில் நடக்கும் கலாம் வேர்ல்டு ரிக்கார்டு 650 எண்ணிக்கையில் கூற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.