மேலும் அறிய

ஒழுங்குமுறை ஆணையம் வேண்டும்: யார் கேட்கிறார்கள் தெரியுங்களா?

நடுத்தர மக்களின் கனவு சொந்த வீடுதான். கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தங்களின் வீடுகளின் கட்டுமானப்பணிகளை பலரும் நிறுத்தியுள்ளதால் கட்டுமானத் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்: கட்டுமான துறைக்கு என்று தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களின் விலைகளை கண்காணிக்க ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கட்டுமான பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கட்டுமானத் தொழில் நாட்டில் வளர்ச்சியின் குறியீடாகவும்,  பண்பாடு, கலாச்சாரம், அறிவியல் தொழில்நுட்பத்தின் வெளிப்பாடாகவும்  இருந்து வருகிறது. கட்டுமான தொழிலை நம்பி கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்போது கட்டுமான தொழிலுக்கு அடிப்படை தேவையான ஜல்லி,கம்பி, சிமெண்ட், எம் சாண்ட் மணல் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு கட்டுமான தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை ஆணையம் வேண்டும்: யார் கேட்கிறார்கள் தெரியுங்களா?

நடுத்தர மக்களின் கனவு சொந்த வீடுதான். ஆனால் தற்போது கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தங்களின் வீடுகளின் கட்டுமானப்பணிகளை பலரும் நிறுத்தி உள்ளனர். இதனால் வேலை கிடைக்காமல் கட்டுமானத் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்ட கட்டுமான பொறியாளர்கள்   மற்றும் கட்டுநர்கள், தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் விலை உயர்ந்துள்ள கட்டுமானப் பொருட்களின் விலைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்டுமான பொறியாளர்கள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான பொறியாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் முரளி குமார், முன்னாள் செய்தி தொடர்பாளர் வைத்தியநாதன், முன்னாள் மாநிலத் தலைவர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான பொருட்களின் அடிப்படை தேவைகளான ஜல்லி, எம்சாண்ட், பிசாண்ட், கம்பி ,சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும், எதிர்காலத்தில் கட்டுமான தொழில் சிறந்து விளங்கிட தமிழ்நாடு அரசு கட்டுமான துறைக்கு என்று தனிஅமைச்சகம் ஏற்படுத்த வேண்டும், கட்டுமான விலை உயர்வு ஏற்படுகின்ற நிலையில் இவைகளை கண்காணித்து, ஒழுங்குப்படுத்திட கட்டுமான ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து கண்காணிக்க வேண்டும்.

காவிரி டெல்டாவில் காவிரி உட்பட பல்வேறு ஆறுகளில்  உள்ள மணல் மேடான பகுதிகளை சீரமைத்திடும் வகையிலும்,அந்தந்த பகுதியில் கட்டுமான தொழிலுக்கு மணலை பயன்படுத்திடவும் யூனிட் கணக்கிட்டு மணல் அள்ளவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான பொறியாளர்கள் சங்க மண்டல தலைவர் ஏ.எஸ்.அறிவழகன், தஞ்சை மைய தலைவர் சி.மாரிமுத்து, முன்னாள் தலைவர் ஜோ.ஜான் கென்னடி ,செயலாளர் ஏ.சார்லஸ்,பொருளாளர் இறை.கார்குழலி, மூவேந்தர் தொழிற்சங்க அமைப்பின் நிர்வாகிகள் சீர்.தங்கராஜ், கோவிந்தராஜ், கருப்பையா, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தற்போதைய நிலையில் பல்வேறு கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதை நம்பி இருந்த கட்டுமானத் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டுமான பணிகளை தவிர வேறு பணிகள் தெரியாத நிலையில் தொழிலாளர்களின் குடும்பம் பொருளாதாரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் முக்கியமான கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக
ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
கை நிறைய கொட்டும் பணம்.! 10வது படித்திருந்தாலே போதும்- இளைஞர்களுக்கு அரசின் அசத்தல் சான்ஸ்
கை நிறைய கொட்டும் பணம்.! 10வது படித்திருந்தாலே போதும்- இளைஞர்களுக்கு அரசின் அசத்தல் சான்ஸ்
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
Embed widget