மேலும் அறிய

கும்பகோணம் பகவத் படித்துறையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காவிரி கரையில் உள்ள பகவத் படித்துறையில் இருந்த ஆக்கிரமிப்புகளை கோவில் அதிகாரிகள் அதிரடியாக அகற்றி பூட்டி சீல் வைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காவிரி கரையில் உள்ள பகவத் படித்துறையில் இருந்த ஆக்கிரமிப்புகளை கோவில் அதிகாரிகள் அதிரடியாக அகற்றி பூட்டி சீல் வைத்தனர்.

பகவத் படித்துறை மண்டபம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் பகவத் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள  நாகேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான பகவத்படித்துறை மண்டபம் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது.

அமாவாசை காலங்களில் தர்ப்பணம்

கரையில் ஆடி அமாவாசை உள்ளிட்ட அமாவாசை காலங்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அமாவாசை காலங்களில் இந்த படித்துறை பொதுமக்களால் நிரம்பி வழியும்.  இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிவானந்தம் என்னும் நபர் படித்துறை பகுதியை ஆக்கிரமித்து மண்டபத்தின் மின்சாரத்தை உரிய அனுமதியின்றி பயன்படுத்தி வந்துள்ளார்.

கும்பகோணம் பகவத் படித்துறையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி

மேலும் அவர் அந்த பகுதியில் வைத்திருந்த பொருட்கள் தர்பணம் கொடுக்க வருபவர்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வந்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்திற்கும், இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் அளித்த வண்ணம் இருந்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் போராட்டம் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு

இதையடுத்து ஆக்கிரமிப்பு புகார் குறித்து கோவில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ஆக்கிரமிப்பை செய்திருந்த சிவானந்தம் மதுரை ஐக்கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து நாகேஸ்வரன் கோவில் செயல் அலுவலர் கணேஷ்குமார், ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் மண்டபத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த பகுதிகளை மீட்டு, மின்சாரத்தை துண்டித்தனர்.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை மண்டபத்தின் வெளியில் வைத்து விட்டு வெளிப்புற கதவை பூட்டி சீல் வைத்தனர். கோர்ட் உத்தரவை கோவில் அதிகாரிகளின் உடனடியாக மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை எடுத்ததற்காக பொதுமக்கள் தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget