40 வயது நோயாளிக்கு ஏற்பட்ட சிறுநீரக செயல் இழப்பை நவீன சிகிச்சை மூலம் சரி செய்து சாதனை
நீண்ட காலம் மது அருந்தும் பழக்கத்தையும், புகை பிடிக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். மிகவும் குறைவான இரத்த அழுத்தம், உப்புச்சத்து, சிறுநீரகம் செயலிழந்தமையால் இரத்தத்தில் அசுத்தம் சேர்ந்தது

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனை, தனது மருத்துவத் திறனை மீண்டும் ஒரு முறை குறிப்பிடத்தக்க வகையில் மெய்ப்பித்திருக்கிறது. 40 வயது நோயாளி ஒருவருக்கு திடீரென்று ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பை சிறுநீரக தொடர் மாற்று சிகிச்சை முறை மூலம் அம்மருத்துவமனை சரி செய்திருக்கிறது (CRRT). இது, மெதுவான, ஆனால் சீரான டயாலிசிஸ் முறையாகும். நீர்ச்சத்து, எலெட்ரோலைட் சமமின்மை பிரச்சனை உள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு உகந்த சிகிச்சை இதுவாகும்.
அந்நோயாளி, நீண்ட காலம் மது அருந்தும் பழக்கத்தையும், புகை பிடிக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். மிகவும் குறைவான இரத்த அழுத்தம் (60 mmHg), அபரிமிதமான உப்புச்சத்து, சிறுநீரகம் செயலிழந்தமையால் இரத்தத்தில் அசுத்தம் சேர்ந்தது என்று உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் இரண்டு இனோட்ரோப்ஸ் எனப்படும் மருந்தின் ஆதரவுடன் தன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இம்மருந்துகள், மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு அவர்களின் இதய செயல்பாட்டை மேம்படுத்தவும் இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கவும் பயன்படுத்தப்படுபவை ஆகும்.
மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் குழு, துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் அவசர கால மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றி, CRRT சிகிச்சையை மேற்கொண்டு, நோயாளியின் உடல்நிலையை சீராக்கியது. 48 மணி நேர சிகிச்சைக்குள்ளாகவே நோயாளியிடம் அவர் குணமடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. இயல்பான முறையில் சிறுநீரும் வெளியேறியது. இது, சிறுநீரகம் சிறப்பாக இயங்குகிறது என்பதைக் காட்டும் அறிகுறி ஆகும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நோயாளியின் கிரியாட்டினைன் அளவு, 4-5 mg/dL என்ற அபாய அளவில் இருந்தது. இந்த சிகிச்சையை அடுத்து, 0.9-1 mg/dL என்ற பாதுகாப்பான நிலைக்கு வந்துவிட்டது.
டெல்டா பிராந்தியத்தில் சிறுநீரக மாற்று தொடர் சிகிச்சையில் (CRRT) சிறப்பாக இயங்கும் மருத்துவமனை (தென் மாவட்டங்களில் இத்துறையில் புகழ்பெற்ற மிகச்சில மருத்துவமனைகளுள் இதுவும் ஒன்று) என்றால் அது தஞ்சாவூரின் மீனாட்சி மருத்துவமனைதான். இது, திடீரென்று சிறுநீரகம் செயலிழந்த நிலையில் வரும் நோயாளிகளின் உடல் நிலையை (குறிப்பாக இரத்த ஓட்ட நிலையை) சரி செய்யப் பயன்படும் முறையாகும். வழக்கமான இரத்த சுத்திகரிப்பு முறையைப்போலல்லாது, இம்முறையில் 24 மணி நேர தொடர் சிகிச்சை இருக்கும். தேவையற்ற கழிவுகள், மிகையாக உடலில் சேர்ந்த திரவங்கள், இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்தும்போது உருவாகும் நச்சுப்பொருட்கள் ஆகியவை அகற்றப்படும். மிக அவசர நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு இது உகந்த சிகிச்சை முறையாகும். இந்த நவீன சிகிச்சை முறைக்கு CRRT இயந்திரங்களும், நுணுக்கமான கண்காணிப்பு மற்றும் மருத்துவ நடைமுறைகளில் தேவையான மாற்றங்களையும் செய்யத்தக்க திறன் வாய்ந்த நரம்பியல் நிபுணர்களும் தேவை. கடந்த சில மாதங்களாக, இந்த நவீன சிகிச்சை முறை மூலமாக,மோசமான உடல்நிலையுடன் இருந்த 8 நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்துப் பேசிய சிறுநீரகவியல் துறையின் ஆலோசகரும் நிபுணருமான மருத்துவர் எஸ்.கெளரி சங்கர் பேசும்போது, “நோயாளி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மோசமான உடல் நிலையுடன் இருந்தார். அவரது இரத்த அழுத்தம், 60 mmHg என்ற நிலையில் இருந்தது. சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழந்துவிட்டன. சிறுநீர் பிரியவே இல்லை. அவரது இதயம் செயல்படுவதற்காக இரண்டு இன்ரோப் மருந்துகள் அளிக்கப்பட்டன. உடனடியாக அவரது இரத்த அழுத்தம் சீரானது. சுவாசத்துக்கான சிகிச்சை நடைமுறைகளும் வழங்கப்பட்டன. மேலும் உடலின் நீர்ச்சத்தும் எலெக்ட்ரோலைட் சமநிலையும் சீராக்கப்பட்டன. சி CRRT நடைமுறை தொடங்கப்பட்டதும் அது, நோயாளி குணமடையப் பெரிதும் உதவி செய்தது. இந்த நடைமுறை, சிக்கலானதாகவும், கூடுதல் வள ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் இருக்கும் என்றாலும் கூட, எமது தேர்ந்த சிறுநீரகவியல் மருத்துவக் குழுவும் அவசர சிகிச்சைக் குழுவும் ஒவ்வொரு மருத்துவ நடைமுறையையும் பின்பற்றி, அதனை வெற்றிகரமாக செய்து முடித்தன. நோயாளியின் உடல் நிலை இருந்த மோசமான சூழலில் CRRT சிகிச்சை மட்டும் இலையென்றால் குணப்படுத்துவது இயலாத ஒன்றாகியிருக்கும்” என்றார்.
CRRT குறித்துப் பேசும்போது, இந்த அதிநவீன சுத்திகரிப்பு நடைமுறை, திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட, சீரற்ற இரத்த ஓட்டம் உடைய நோயாளிகளுக்காகவே உருவாக்கப்பட்டதாகும். அதேபோல இரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்கள், கழிவுகளை அகற்றவும் இது பயன்படுத்தப்படுகிறது. வழக்கமான டயாலிசிஸ் முறையில் 3-4 மணி நேரம் பிடிக்கும். எனவே, இதனை முடித்துவிட்டு அதே நாளில் நோயாளி வீடு திரும்புவார். ஆனால், CRRT முறை என்பது மெதுவான, தொடர் சிகிச்சையாகும். எனவே இது முடிவடைய மணிக்கணக்கில் நேரம் பிடிக்கும். மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு சீரான இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டுமென்றால் இவ்வாறு படிப்படியான அணுகுமுறைதான் சரியானதாக இருக்கும். மிகக்குறைந்தஈஇரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வழக்கமான டயாலிசிஸ் முறை பொருத்தமானதாக இருக்காது. காரணம், அது இரத்த அழுத்தத்தை மென்மேலும் குறைக்கக்கூடும். ஆனால், CRRT முறையோ, நோயாளியின் நிலையை மென்மேலும் மோசமானதாக ஆக்குவதில்லை. மாறாக, உயிர்காக்கும் சிகிச்சையாகவே அமைந்திருக்கிறது.
பல்வேறு கடுமையான தொற்றுகள் (எ.கா. செப்சிஸ்), இதய செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, டிஸ் ஆட்டோனாமிக் ஷாக் (உடலின் நரம்பு மண்டலம்,ஈஇரத்த அழுத்தம் மற்றும் இதர முக்கியப் பணிகளை செய்ய மறுக்கும் நிலை) ஆகியவற்றின் விளைவாக குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்ட நோயாளிகளுக்கு CRRT நடைமுறை சிகிச்சை நல்ல பலனளிக்கிறது. இது, அதிக இடரை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு முழுக்க கட்டுப்படுத்தப்பட்ட, இரத்தத்தை சுத்திகரித்து வடிகட்டும் பாதுகாப்பான-மாற்று சிகிச்சையாக அமைகிறது.





















