பாதாள சாக்கடை அடைப்பு பணிகளை உடனுக்குடன் முடிக்கணும்: அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தல்
தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள ஒன்று முதல் 51 வார்டுகளில் பாதாள சாக்கடை அடைப்பு, பாதாள சாக்கடையில் பழுதடைந்த இயந்திரம் இறங்கும் குழிகள் சரி செய்தல்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டரங்கில் பொறியியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பாதாள சாக்கடை பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்று மேயர் சண்.ராமநாதன் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் பாதாள சாக்கடை அடைப்பு பவர் பங்கு மற்றும் மினி பவர் பண்புகளில் பழுதடைந்த மோட்டார்களை சரி செய்தல் உட்பட பணிகள் குறித்து பொறியியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். ஆணையர் கண்ணன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள ஒன்று முதல் 51 வார்டுகளில் பாதாள சாக்கடை அடைப்பு, பாதாள சாக்கடையில் பழுதடைந்த இயந்திரம் இறங்கும் குழிகள் சரி செய்தல், பவர் பம்ப் மற்றும் மினி பவர் பம்புகளை பழுதடைந்த மோட்டர்களை சரி செய்தல், குடிநீர் குழாய் பழுதுகள், போர்வெல், தார் சாலை மற்றும் கான்கிரீட் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்தல், பழுதடைந்த மின்விளக்குகளை எரிய செய்தல் குறித்து தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது,
மேற்கண்ட பணிகளை மாநகராட்சியில் ஒப்பந்தம் பெறப்பட்ட ஒப்பந்ததாரர்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு உடன் நிவர்த்தி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பணியில் செய்யும் நிலை ஏற்பட்டால் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சி பாதாள சாக்கடை அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். சிறிய அளவில் படைப்புகள் இருக்கும்போதே அவற்றை சீரமைக்க வேண்டும். இதேபோல் பவர் பம்ப் மற்றும் மினி பவர் பம்புகளில் பழுதடைந்த மோட்டார் களை உடனுக்குடன் சரி செய்ய வேண்டி பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படக் கூடாது. குடிநீர் குழாய் பழுதுகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தி சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதாள சாக்கடைகள் அடைப்பு பிரச்சனையை சிறிய அளவில் இருக்கும்போதே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தக் கூடாது. பொதுமக்களுக்கான அத்தியாவசிய, அடிப்படை பிரச்சனைகளில் எவ்வித காலதாமமும் செய்யக்கூடாது. மக்களின் பிரச்னைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மேலும் பழுதான நிலையில் உள்ள ஜெனரேட்டர்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சீரமைக்க வேண்டிய சாலைப்பணிகள் குறித்து உரிய கவனம் செலுத்தி சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல குழு உறுப்பினர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, கலையரசன், ரம்யா சரவணன்மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





















