தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கான்பரன்ஸ் ஹால் திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கான்பரன்ஸ் ஹால் திறக்கப்பட்டது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கான்பரன்ஸ் ஹாலை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புதிதாக கான்பரன்ஸ் ஹால் கட்டப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். பின்னர், மத்திய மண்டல ஐ.ஜி., கார்த்திகேயன், தஞ்சாவூர் சரக டிஐஜி., ஜியாஉல் ஹக், மாவட்ட எஸ்.பி.க்கள் ஆஷிஷ் ராவத் (தஞ்சாவூர்), ஜெயக்குமார் (திருவாரூர்), ஹர்ஷ் சிங் (நாகை), கே. மீனா (மயிலாடுதுறை) ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து, காவல் துறை அமைச்சுப் பணியாளர்களிடம் டிஜிபி சங்கர் ஜிவால் பேசுகையில், கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, அலுவலக வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார். இதில் ஏஐஜிக்கள் (தலைமையிடம்) ஸ்ரீநாதா, பாலாஜி, தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிச்சைமுத்து கண்ணன், சக்திவேல், ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.