மேலும் அறிய
Advertisement
தஞ்சையை குளிர்வித்த தொடர் மழை: குளிர் காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி
திருவையாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான கோடை மழை பெய்ததால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு இன்று அதிகாலை வரை மழை பெய்தபடி இருந்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.
சாரல் மழையால் வெப்பம் தணிந்தது
கடந்த சில நாட்களாகவே தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தாக்கம் தினமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. தஞ்சை மாவட்டத்தில் பல நாட்கள் 100 டிகிரி தாண்டி வெப்பம் கொளுத்தியது. இந்த வெப்பம் நாளுக்கு நாள் விருந்து கொண்டே இருந்ததே தவிர குறையவில்லை. இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
வெயில் தாக்கத்தால் மக்கள் அவதி
வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் இளநீர், நுங்கு, குளிர்பானங்கள், கரும்பு சாறு அருந்தி தங்களை பாதுகாத்துக் கொண்டனர். மதிய வேளையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, உட்பட பல பகுதிகளில் குழந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தால் வெப்பம் தணிந்து குளிக்காட்டு வீசியது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று இரவு முதல் நல்ல மழை
தஞ்சை நகர் பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்த நிலையில் நேற்று மாலை அரை மணி நேரம் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து நேற்று இரவு முதல் தஞ்சாவூர் நகர் பகுதி, பூதலூர், வல்லம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, அம்மாபேட்டை உட்பட பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
பேராவூரணி பகுதியில் 45 மில்லி மீட்டர் மழை
தஞ்சை நகர் பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதே போல் கடந்த சில நாட்களாக பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரங்களில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து திடீர் மழையும் ஒரு சில ஊர்களில் மழை பெய்யாமல் போக்கு காட்டியும் சென்ற நிலையில் நேற்று (15ம் தேதி) பேராவூரணியை சுற்றி வானில் கருமேகம் திரண்டு மதியம் 12:30 மணி முதல் மாலை 3 மணி வரை பரவலாக பலத்த மழை பெய்தது. இரவில் பல பகுதிகளில் மழைத் தொடர்ந்து பெய்துக் கொண்டே இருந்தது.
பேராவூரணியில் 45மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதனால் பொது மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று விடுபெற்று மகிழ்ச்சியடைந்தனர். பலத்த மழையால் பேராவூரணி நகர் பகுதியில் தண்ணீர் தேங்கியது.
கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருவையாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான கோடை மழை பெய்ததால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். மிதமான கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் பணியிலும், கோடை உழவு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோடை மழை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமான அளவில் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழையும், தூறலும் மாறி, மாறி பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் குறைந்து இதமான காற்று வீசத் தொடங்கியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion