மேலும் அறிய

தஞ்சையில் உவர் நீரில் மீன்வளர்ப்பிற்கு மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

உவர்நீரில் (கொடுவா-Sea bass) மீன் வளர்ப்பிற்கு மானியம் வழங்கும் திட்டம் குறித்து தஞ்சை மாவட்ட  கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்: உவர்நீரில் (கொடுவா-Sea bass) மீன் வளர்ப்பிற்கு மானியம் வழங்கும் திட்டம் குறித்து தஞ்சை மாவட்ட  கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இத்திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் (கொடுவா-Seabass) மீன் உற்பத்தியினை அதிகரிக்கவும் மற்றும் புதியதாக கொடுவா மீன்குளங்கள் அமைத்திட விரும்புவோர்கள் பயன்பெறும் வகையில் புதிய மீன்குளங்கள் அமைக்கவும் அதற்கான உள்ளீட்டு செலவீனங்களுக்கு மானியம் வழங்கிடும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் புதிய மீன்குளம் ஒரு ஹெக்டேர் அளவில் அமைத்திட செலவினம் ரூ.8 லட்சம் எனவும் உள்ளீட்டு செலவீனம் ரூ. 6 லட்சம் எனவும் நிர்ணயித்து அதனில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியமாக ரூ.5.60 லட்சம் வழங்கப்பட உள்ளது.

மேலும் இதேபோன்று உயிர் கூழ்மதிரன் (Biofloc) குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு செலவீனங்களுக்கான மானியம் வழங்கும் திட்டத்திற்கு மகளிர் பிரிவின் கீழ் (60%) மானியம் 3 எண்ணம் (Unit) இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 1 அலகிற்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.18 லட்சத்தில் பெண்களுக்கு 60% மானியமாக ரூ.10.80 லட்சம் வழங்கப்படும்.

மேலும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22ன் கீழ் உவர்நீர் இறால் வணிப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீட்டு செலவீனங்களுக்கான மானியம் பொதுப்பிரிவிற்கு 6 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் புதிய இறால் வளர்ப்பு குளம் அமைப்பதற்கும் மற்றும் உள்ளீட்டு செலவீனத்திற்கான மொத்த செலவினம் ரூ.14 லட்சத்தில் 40% மானியமாக ரூ.5.60 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

தஞ்சையில் உவர் நீரில் மீன்வளர்ப்பிற்கு மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தஞ்சாவூர், எண்.873/4, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், அலுவலக முகவரியில் நேரிலோ அல்லது 04362-235389 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு 20.12.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உவர்நீர் மீன் வளர்ப்பு, இறால்/மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், அதிகப்பட்ச பொருளாதார மற்றும் சமூகப் பலன்களைப் பெறுவதற்கும், உற்பத்தி செய்யாத மற்றும் ஓரளவு விளையும் கரையோர நிலங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் உவர்நீர் நிலைகள், ஏற்றுமதிக்கான உற்பத்தியைப் பெருக்குதல் போன்றவற்றுக்கு அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அந்நியச் செலாவணி வருவாய், உணவுப் பாதுகாப்பு அமைப்புக்கான ஆதரவு, துணைத் தொழில்களை நிறுவுதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் கிராமப்புற ஏழைகளின் சமூகப் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல். இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் போதுமான மற்றும் தொடர்ச்சியான ஆர் & டி ஆதரவு தேவைப்படுவதால், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் VII திட்ட காலத்தில் (1985-90) 1.4.1985 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், உவர்நீர் மீன்வளர்ப்புக்கான மத்திய நிறுவனத்தை நிறுவ அனுமதித்தது. பின்னர் தற்போதுள்ள மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் கவுன்சில். நிறுவனம் ஏப்ரல், 1987 முதல் சுதந்திரமாக செயல்படத் தொடங்கியது. 

உவர்நீரில் மீன் மற்றும் மட்டி மீன்களுக்கான தொழில்நுட்ப பொருளாதார ரீதியாக சாத்தியமான மற்றும் நிலையான கலாச்சார அமைப்புகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஆராய்ச்சி நடத்துதல்

குறிப்பாக ஊட்டச்சத்து மற்றும் தீவன மேம்பாடு, இனப்பெருக்க உடலியல், நோயியல், மரபியல், குளம் சூழல், மீன்வளர்ப்பு பொறியியல் மற்றும் செயல்பாட்டு பொருளாதாரம் ஆகியவற்றில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு, உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குதல் மற்றும்

பயிற்சி, கல்வி மற்றும் விரிவாக்க திட்டங்கள் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்வது மற்றும் நிறுவன ஆலோசனை சேவைகளை வழங்குதல் போன்ற பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget