பொதுமக்கள் கவனத்திற்கு... நம்பி ஏமாந்து விடாதீர்கள்: தஞ்சை கலெக்டர் அறிவுறுத்தல்
மாவட்ட கலெக்டர் பெயரிலோ அல்லது புகைப்படத்தினையோ போலியாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் நம்பி ஏமாந்து விட வேண்டாம்

தஞ்சாவூர்: பொதுமக்கள் கவனத்திற்கு... யாரும் நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பெயரிலோ அல்லது புகைப்படத்தினையோ போலியாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெயரிலோ அல்லது புகைப்படத்தினையோ போலியாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் நபர்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம்.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு தொலைபேசி, வாட்ஸ்அப், முகநூல், இன்ட்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பணம் கேட்டோ, வங்கி விபரங்கள் குறித்தோ அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் தங்கள் விபரங்களை தெரிவித்து ஏமாற வேண்டாம்.
அதேபோல், மாவட்ட கலெக்டர் எனக்கு வேண்டப்பட்டவர்கள் என்று சொல்லி வேலை வாங்கி தருவதாக பொய் வாக்குறுதிகளை நம்பி எந்தவொரு நபரிடமும் பணங்களை கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும், சைபர் கிரைம் சம்பந்தமான குற்றங்களுக்கு உடனடியாக பொதுமக்கள் காவல் துறையை அணுகி புகார் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
காலை உணவுத்திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டப் பணிகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட கண்காணிப்புக் குழுவின் மாவட்ட அளவிலான மாதாந்திர கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவு பாதுகாப்பானதாகவும். தரமானதாகவும் வழங்குவதை அலுவலர்கள் தொடர் ஆய்வின் வழி கண்காணித்திட வேண்டும் எனவும், மைய பொறுப்பாளர்கள் வருகை, உணவுப்பொருட்கள் இருப்பு பதிவேடுகள் பாரமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்யவேண்டுமெனவும். முக்கியமாக காலவாதியான பொருட்கள் இருப்பில் உள்ளதா என்பதை கண்டறிந்து உடன் அதனை மாற்றம் செய்திடவும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பொன்னியின் செல்வன், உதவி மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், இணை பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், அனைத்து ஊராட்சி ஒன்றிய துணை வடடார வளர்ச்சி அலுவலர்கள் (சத்துணவு), தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் அனைத்து மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர்கள் போன்ற பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





















