Thanjavur Student Case: தஞ்சை மாணவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
தஞ்சை மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சையாகியது. கடந்த வாரம் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தமிழக டி.ஜி.பி. மேல்முறையீடு செய்துள்ளார். உயிரிழந்த மாணவியின் தந்தை முருகானந்தம் சார்பிலும் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தஞ்சை மாவட்டத்தின் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பள்ளியில் பயின்று வந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். பள்ளி நிர்வாகம் அவரை மதம்மாறச் சொல்லி துன்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. மாணவி உயிரிழந்தது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களான முருகானந்தம் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில்தான், சி.பி.ஐ. விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் விஸ்வரூபமானதைத் தொடர்ந்து தஞ்சை எஸ்.பி. முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டார்.
மேலும் படிக்க : CN Annadurai : ’சொல் வாள் சுழற்றி களம் கண்ட அண்ணா’ ஒற்றையாட்சி முறையை முளையிலேயே எதிர்த்த கலகக்காரன்..!
அவரது விசாரணையில் மாணவியை மதம்மாறச் சொல்லி வற்புறுத்தி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது என்று எஸ்.பி. ரவளிப்பிரியா கூறினார். மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விசாரணையிலும் மதம்மாற்றச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று தெரியவந்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.
மேலும், மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக வல்லம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையிலும் மாணவியின் பெற்றோர்களான முருகானந்தம், சித்தி சரண்யா, மாணவி பேசுவது போல வைரலான வீடியோவை எடுத்தவர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். மேலும், மாணவி பேசியதாக வைரலான வீடியோவை எடுத்த செல்போன் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆய்விற்காக சென்னையில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Watch video : மது பாட்டிலோடு பார் பெண்களுடன் டான்ஸ் ஆடிய முதியவர்.. கைது செய்த காவல்துறை.. ஏன்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்