மேலும் அறிய

படிப்பு ஒரு பக்கம், குடும்ப வருவாய்க்காக உழைப்பு மறுபக்கமாக சுழலும் தஞ்சை கல்லூரி மாணவி

காலையில் கல்லூரி, மாலையில் பகுதிநேர பணி, விடுமுறை நாளில் தாய்க்கு துணையாக இளநீர் கடை என்று சுற்றி சுழலும் பம்பரமாக காயத்ரி இருக்கிறார்.

தஞ்சாவூர்: வீட்டுக்கு அஸ்திவாரமாய், வீட்டை காக்கும் மேற்கூரையாய் தங்களை வருத்திக் கொண்டு குடும்பத்திற்காக சோதனைகளை சாதனைகளாக்கி பாரதி கண்ட வீரமங்கைகளாக உலா வரும் பெண்கள் வீர வேங்கைகள்தான் என்றால் மிகையில்லை.

தன்னை மதிப்பவருக்கு மலராகவும், மிதிப்பவர்களுக்கு வீர மங்கைகளாகவும் எந்தத் துறையாக இருந்தாலும் அதில் வெற்றி பெற முழு மனதுடன் முயற்சி எடுக்கும் பெண்கள் சாதனையாளர்களாக உலா வருகின்றனர். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம் என்ற பாரதியாரின் கருத்து இன்று நினைவாகி வருகிறது. இங்கு ஆணுக்கு நிகராக சரிக்கு சமமாய் எத்துறையாக இருந்தாலும் அதில் வல்லமை காட்டி சமுதாயத்தை தங்களை நோக்கி அண்ணாந்து பார்க்க வைத்துள்ளனர் மகளிர். அந்த வகையில் தன் குடும்பத்திற்காக கல்வி ஒரு பக்கம், பகுதி நேர பணி மறு பக்கம், தாய்க்கு உறுதுணையாக விடுமுறை நாளில் இளநீர் விற்பனை மறு பக்கம் என்று சுற்றி சுழலும் தஞ்சையின் சிங்கப் பெண் பற்றி பார்ப்போம்.

தஞ்சையை பெரிய கோவில் அருகே உள்ள ராஜராஜன் சிலையை விடுமுறை நாட்களில் கடந்து செல்பவர்களுக்கு இந்த பெண் நன்கு பரிட்சயம் ஆகி இருப்பார். இளநீரை எடுக்கும் கரங்கள் வெகு வேகமாக அரிவாள் அதை சீவி வாடிக்கையாளர்கள் கரங்களில் சில நொடிகளில் கொண்டு சேர்க்கும் அந்த கல்லூரி மாணவிதான் காயத்ரி. தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரியில் பி‌.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு அக்கா ஒருவரும், தம்பி ஒருவரும் உள்ளனர். அப்பா முருகானந்தம். சமீபத்தில் காலமாகி விட்டார்.  அம்மா சரிதா. பல ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை பெரிய கோயில் மற்றும் மேல வீதி பகுதியில் தள்ளுவண்டியில் இளநீர் விற்று அன்றாட பிழைப்பை நடத்தி வருபவர்கள். தந்தையின் உடல்நலன், மிகுந்த சிரமப்படும் தாய்க்கு பக்கத்துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக காலையில் கல்லூரி, மாலையில் பகுதிநேர பணி, விடுமுறை நாளில் தாய்க்கு துணையாக இளநீர் கடை என்று சுற்றி சுழலும் பம்பரமாக காயத்ரி இருக்கிறார்.

படிப்பு ஒரு பக்கம், குடும்ப வருவாய்க்காக உழைப்பு மறுபக்கமாக சுழலும் தஞ்சை கல்லூரி மாணவி

ஓய்வின்றி உழைக்கும் அம்மாவை நல்லபடியாக வைத்து கொள்ள வேண்டும். வாழ்வில் மிகப்பெரிய வெற்றிகளை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கடிகாரத்தின் முட்களுக்கு இணையாக ஓடுகிறார். க்ளாசிக்கல் டான்ஸில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் பரத நாட்டிய பயிற்சியும் எடுத்து வருகிறார். வாரத்தில் 5 நாட்கள் கல்வி கற்கவும், பகுதிநேர பணிக்கும் ஓடிக்கொண்டே இருப்பவர்... சனி, ஞாயிறு அன்றும் தங்களின் இளநீர் வியாரத்தில் பிஸியாக இருக்கின்றனர்.

இதுகுறித்து மாணவி காயத்ரி கூறுகையில், "நான் 8ம் வகுப்பு படிக்கும்போதே அம்மாவுக்கு துணையாக விடுமுறை நாளில் இளநீர் வெட்ட பழகிக் கொண்டேன். தற்போது கல்லூரி படித்து கொண்டிருந்தாலும், இளநீர் கடையில் நின்று வியாபாரம் செய்துகிறேன். என் குடும்பத்திற்காக உழைப்பதில் எனக்கு மிகுந்த பெருமைதான். என்னால் முடிந்த அளவுக்கு என் அம்மாவுக்கு உதவுகிறேன் என்பதும் மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன். கல்லூரியில் படித்தாலும் அங்கு படிக்க வைக்க என் அம்மா சிரமப்படுவதை பார்த்துதான் வளர்ந்தேன். அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. கிளாசிக்கல் நடனத்தையும் நன்றாக கற்று முன்னேற வேண்டும் என்பது எனது கனவு. நான் வியாபாரம் செய்யும்போது ஒரு நாளைக்கு ரூ.1000, ரூ.1500 வரை இளநீர் விற்பனை செய்வேன். என் அம்மா கடைக்கு வந்து வியாபாரம் பார் என்று எப்போதும் கூறியதில்லை. சொந்த காலில் நின்று உயர்வடைய வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய குறிக்கோள்" என்றார் காயத்ரி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Embed widget