மேலும் அறிய

வந்தாரு... பார்த்தாரு... சென்றார்: யார்? எங்கே? எதற்கு தெரியுங்களா?

ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம் சிவனுக்கு உகந்ததாகும். ஆகவே பெருவுடையாரை தரித்த ஆளுநர் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு நடந்த அபிஷேகத்தை கூட பார்க்காமல் திருப்பி சென்றார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூருக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திர மௌலீஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து விட்டு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். பின்னர் மாலையில் பெரிய கோயிலில் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார்.

தஞ்சாவூருக்கு காலையில் வந்த தமிழக ஆளுனர்

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று 11:30 மணியளவில் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். இதற்காக சென்னையில் இருந்து காலை விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் ஆளுனர் ஆர்.என்.ரவி மதியம் 12 மணியளவில்  தஞ்சாவூர் அரண்மனைக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து அரசு குடும்பத்தினர் வழிபாடு செய்யும் சந்திர மௌலீஸ்வரர் சன்னதி வழிபாடு செய்ய சென்றார்.

அங்க அவரை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குடும்பத்தினர் மங்கள வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அங்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர் சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு வந்த ஆளுநரை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ஆளுனர் சரஸ்வதி மஹால் நூலக ஒலி ஒளி காட்சியகத்தில் தஞ்சாவூர் சுற்றுலா தலங்கள், நவக்கிரக ஸ்தலங்கள், கல்லணை உட்பட பல்வேறு காட்சிகள் அடங்கிய திரைப்படத்தை 25 நிமிடங்கள் பார்வையிட்டார். 

வந்தாரு... பார்த்தாரு... சென்றார்: யார்? எங்கே? எதற்கு தெரியுங்களா?

அருங்காட்சியகம், நூலகத்தை பார்வையிட்டார்

பின்னர் அருங்காட்சியகம் மற்றும் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். இதையடுத்து 12:45 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை சுற்றுலா மாளிகைக்கு சென்றார். ஆளுனருடன் அவரது மகன் ராகுல் ரவி உடன் வந்தார். மதிய உணவு சாப்பிட்ட பின்னர் மாலை 4 மணி அளவில் சுற்றுலா மாளிகையில் இருந்து கிளம்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி 4.10 மணியளவில் தஞ்சை பெரியகோயிலை வந்தடைந்தார்.

பெரிய கோயிலில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

அங்கு அவருக்கு அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, அறநிலைத்துறை உதவி ஆணையர் கவிதா ஆகியோர் பூரண கும்ப வரவேற்பு அளித்தனர். கோயில் உள்ளே வந்த ஆளுநர் வராஹி அம்மன் மராட்டா விநாயகர்,  பெருவுடையார், பெரியநாயகி அம்மன் தரிசனம் செய்தார். பின்பு தாண்டவ மாடியின் மீது ஏறி பார்வையிட்டார். தொடர்ந்து நந்தி பகவானை வணங்கினார்.

வளர்பிறை பிரதோஷம் சிவனுக்கு உகந்தது

ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம் சிவனுக்கு உகந்ததாகும். ஆகவே பெருவுடையாரை தரித்த ஆளுநர் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு நடந்த அபிஷேகத்தை கூட பார்க்காமல் திருப்பி சென்றார். 5.10 மணியளவில் தஞ்சை பெரியகோயிலில் இருந்து கிளம்பி ஆளுநர் சுற்றுலா மாளிகை சென்று ஓய்வு எடுத்து பின்பு கார் மூலம் திருச்சி புறப்பட்டார்.

முன்னதாக ஆளுநர் வருகையை ஒட்டி பெரிய கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பெரிய கோயிலுக்கு வந்த பொதுமக்களின் பொருட்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதித்தனர். ஆளுனர் வருகையை ஒட்டி 150க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget