மேலும் அறிய

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கால்களை அகற்றாமல் பாதுகாக்கும்: சிகிச்சை நிபுணர் தகவல்

நீரிழிவு நோயால் பாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. முழுமையான சிகிச்சை அளித்தால், காலையே அகற்ற வேண்டிய பிரச்சனைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும்.

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் நீரிழிவு பாத நோய் சிகிச்சை அமைப்பில் மருத்துவர்கள் இருந்து கொண்டு சேவை செய்து வருகிறார்கள் என்று சர்க்கரை நோய் பாத பாதிப்பு சிகிச்சை நிபுணரும், சங்க அகில இந்திய தலைவருமான டாக்டர் ஏ.பி.எஸ்.சூரி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு வருகை தந்திருந்த டெல்லியைச் சேர்ந்த சர்க்கரை நோய் பாத பாதிப்பு சிகிச்சை நிபுணரும், அச்சங்கத்தின் அகில இந்திய தலைவருமான டாக்டர் ஏ.பி.எஸ்.சூரி நிருபர்களிடம் கூறியதாவது, 

"இந்தியாவில் முழுவதும் கிட்டத்தட்ட எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சரி பாதி பேருக்கு நீரிழிவு நோயால் பாதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதில் நான்கில் ஒரு பகுதியினருக்கு கால்களையே அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நீரிழிவு பாத நோய் அவர்களுக்கு மிகக் கடுமையான பாதிப்பை உண்டாக்கி அதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் நிலையை நாம் பார்க்கிறோம். 

உலகிலேயே இந்தியா தான் நீரிழிவு நோயின் தலைநகரம் என்று சொல்லக்கூடிய நிலை உள்ளது. அந்த அளவுக்கு இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் அதிகளவு உள்ளனர். நீரிழிவு நோயாளிகளுக்கு தங்கள் பாதங்களை பாதுகாக்கும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நீரிழிவு பாத நோய் சிகிச்சை குறித்து பிரத்தியேகமாக கற்றுக் கொண்டுள்ள எங்களைப் போன்ற மருத்துவர்கள் இந்திய நீரிழிவு பாதநோய் சிகிச்சை என்ற அமைப்பில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். 

இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் எங்களுடைய அமைப்பு மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் நீரிழிவு பாத நோய் சிகிச்சை அமைப்பில் மருத்துவர்கள் இருந்து கொண்டு சேவை செய்து வருகிறார்கள். நீரிழிவு பாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்த குடும்பத்திற்கும் ஏராளமான பொருட் செலவும் பொருளாதார பாதிப்புகளும் ஏற்படக்கூடிய நிலைமை உள்ளது. 

நீரிழிவு நோயால் பாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. முழுமையான சிகிச்சை அளித்தால், காலையே அகற்ற வேண்டிய பிரச்சனைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும். தொடர் சிகிச்சை என்பதால் அவர்களுக்கு பெருமளவு பொருளாதார சிரமங்கள் ஏற்படக்கூடும். இதிலிருந்து அவர்களைப் மீட்க, நவீன சிகிச்சை முறையைக் கொண்டு வந்து அவர்களுடைய கால்களை அகற்ற வேண்டிய நிலையில் இருந்து பாதுகாத்து, நல்ல ஒரு வாழ்க்கை சூழலை ஏற்படுத்த இந்தியாவில் எங்களுடைய அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

நான் நேற்று கேரளத்தில் எங்களுடைய அமைப்பை துவக்கி வைத்து அங்கு ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியுள்ளோம்.  வரக்கூடிய 2025 ஏப்ரல் மாதத்தில் தஞ்சாவூரில் எங்களுடைய அகில இந்திய அமைப்பு, இங்குள்ள நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர்களுடன் இணைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு மிகப்பெரிய கருத்தரங்கத்தை நடத்த இருக்கிறோம். 

அந்த கருத்தரங்கத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து, பல்வேறு மாநிலங்களில் நீரிழிவு சிகிச்சையில் ஈடுபட்டு இருக்கக்கூடிய மருத்துவர்கள், ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ சிகிச்சைகளை செய்யக்கூடிய மருத்துவர்களும் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் எல்லாரையும் உள்ளடக்கி இந்த கருத்தரங்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். 

இந்தியாவை சர்க்கரை பாத நோய் மற்றும் கால்களை அகற்றுவதில் இருந்து பாதுகாத்து இந்தியாவை ஒரு வளமிக்க தேசமாக மாற்றுவதற்காக நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். அந்த கருத்தரங்கை நடத்துவதற்கு பட்டுக்கோட்டை நீரிழிவு சிகிச்சை மருத்துவர் நிரூபன் சக்கரவர்த்தியை தலைவராகவும், செல்வின் ஜோசப்பை செயலாளராகவும் கொண்ட ஒரு வரவேற்புக் குழு அமைக்கப்பட உள்ளது. 

அந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளில் இருந்தும் நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். இதன் மூலம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கால்களை அகற்றாமல் பாதுகாக்கும் வகையில் இந்தியாவை ஒரு வளமிக்க தேசமாக உருவாக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
அப்போது பட்டுக்கோட்டை மெரினா மருத்துவமனை மருத்துவர் நிரூபன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget