மேலும் அறிய

4 ஆண்டுகளில் தஞ்சாவூர் விதை தரக்கட்டுப்பாட்டு பிரிவு மேற்கொண்டுள்ள சூப்பர் பணிகள்

கடந்த 4 ஆண்டுகளில்,  விதை சட்ட விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட 745 மெட்ரிக் டன் அளவுள்ள 382 லட்சம் மதிப்புள்ள விதைகளுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் விதை தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு கடந்த 4  ஆண்டுகளாக செய்து வரும் சாதனைகள் விவசாயிகள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது. 

தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க செய்திடும் பொருட்டு விதை ஆய்வு பிரிவு தஞ்சாவூர் மாவட்ட அளவில் விதை ஆய்வு துணை இயக்குநர் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. விதைச் சான்றழிப்பு மற்றும் உயிர்மச்சான்று துறையின் விதைச் சட்டம் அமலாக்க பணியினை விதை ஆய்வு துணை இயக்குநர் செயல்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்க, விதை ஆய்வு பிரிவு விதை விற்பனையாளர்களுக்கு விதை உரிமம் வழங்குதல், விதையின் தரத்தினை உறுதி செய்திட விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தல், விதையின் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு விதை விற்பனை நிலையங்களில் விதை மாதிரிகள் பகுப்பாய்விற்காக எடுத்தல்.


4 ஆண்டுகளில் தஞ்சாவூர் விதை தரக்கட்டுப்பாட்டு பிரிவு மேற்கொண்டுள்ள சூப்பர் பணிகள்

விதை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளித்தல், பணிவிதை மாதிரிகள் பகுப்பாய்விற்கு அனுப்பிட விதை விற்பனையாளர்களை ஊக்குவித்தல், தரமற்ற விதை குவியல்கள் மீது விதை சட்டத்தின்படி துறை ரீதியாகவும், நீதிமன்றம் மூலமாகவும்  நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

விதை சட்ட அமுலாக்கம், விதைச் சான்றழிப்பு மற்றும் உயிர்மச்சான்று  துறையின் விதை ஆய்வு பிரிவு விதைச்சட்டம் 1966, விதை கட்டுப்பாட்டு 1983 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 அமலாக்கம் செய்து வருகிறது. விதைக்கட்டுப்பாட்டு ஆணையின் படி விதை கொள்முதல் செய்தல் , இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு விதை விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது. விதை விற்பனை நிலையங்களிலிருந்து விதை ஆய்வாளர்கள் மூலம் விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்காக விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி தரத்தினை உறுதி செய்கிறது. தரமற்ற விதைக் குவியல்கள் கண்டறிதல், விற்பனை தடை உத்தரவு பிறப்பிப்பதோடு, உரிய நபரின் மீது விதைச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

சான்று பெற்ற விதைகள் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம், விதைச்சட்ட அமுலாக்கம், விதைப்பரிசோதனையின் நோக்கம் மற்றும் விதை விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய பயிற்சியானது விதை ஆய்வாளர்களால்  வழங்கப்படுகிறது.  கடந்த 4 ஆண்டுகளில் இதுபோன்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்படி 2021-22 முதல் 2014-25 வரையிலான கடந்த 4 ஆண்டுகளில் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை, 1983 இன் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்களுக்கு 602 விதை விற்பனை உரிமங்களை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விதை விற்பனை நிலையங்கள் விதை ஆய்வாளர்கள் மூலம் 12448 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விதைக் குவியல்களிலிருந்து கடந்த 4 ஆண்டுகளில் 9437 அலுவலக விதை மாதிரிகள் மற்றும் 3400 பணிவிதை மாதிரிகள் முளைப்புதிறன் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. அறிவிக்கை செய்யப்பட்ட விதைப் பரிசோதனை ஆய்வகத்தில் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு தரமற்ற விதைக் குவியல்களுக்கு எதிராக 429 துறை நடவடிக்கைகள் மற்றும் 26 சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில்,  விதை சட்ட விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட 745 மெட்ரிக் டன் அளவுள்ள 382 லட்சம் மதிப்புள்ள விதைகளுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தரமற்ற விதைகளை உற்பத்தி செய்த உற்பத்தியாளர் மற்றும் விற்பனை செய்த விதை விற்பனையாளர்கள் மீது நீதிமன்றத்தில் 26 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அனைத்து 26 வழக்குகள் விதை சட்ட விதிகளின்படி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget