மேலும் அறிய

இந்த மாதம் முழுவதும் விடுமுறை இல்லைங்க... யார் சொல்லியிருக்காங்க தெரியுமா?

பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மற்றும் குடும்பத்தினர் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இப்பூங்கா, மே மாதம் முழுவதும் விடுமுறையின்றி செயல்படும்.

தஞ்சாவூர்: இல்லைங்க... மே மாதம் முழுவதும் விடுமுறையே இல்லைங்க என்று மாவட்ட வன அலுவலகம் அறிவிச்சு இருக்கு. என்ன விஷயம் தெரியுங்களா? 

திருச்சி மாவட்டம் என்றாலே முக்கொம்பு, மலைக்கோட்டை, கல்லணை, போன்ற சுற்றுலா தலங்கள்தான் நினைவுக்கு வரும். அந்த லிஸ்ட்டில் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே மேலூர் நடுக்கரை கிராமத்தில், உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவும் இடம் பிடிச்சு இருக்கு. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில் இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா அட்டகாசமாக அமைந்துள்ளது.

இது தமிழ்நாடு அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. மேலும்  தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு பல்வேறு பூச்சி இனங்கள் உதவிபுரிந்தாலும், வண்ணத்துப்பூச்சிக்குதான் முக்கியமான பங்குண்டு. பெருகிவரும் நகரமயமாதல் காரணமாக, வனப்பகுதிகளின் பரப்பளவு குறைந்து வரும் நிலையில் அழிந்து வரும் வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாக்கவும், அதன் இனத்தைப் பெருக்கவும், திருச்சியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.


இந்த மாதம் முழுவதும் விடுமுறை இல்லைங்க... யார் சொல்லியிருக்காங்க தெரியுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு, ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாக இதனை அறிவித்தார். தற்போது இயற்கை அழகு மிகுந்த சுற்றுலா இடமாக இது மாறியுள்ளது என்றால் மிகையில்லை. இங்கு, இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாவுக்காக அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். ஸ்ரீரங்கம் அருகே மேலூர் நடுக்கரை கிராமத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள  இந்த பூங்கா எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வண்ணத்துப்பூச்சிப் பூங்காவுக்கு ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலாப் பிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகளோடு குடும்பங்கள் என அனைத்து தரப்பினரும் வர, இது ஒரு முழுமையான சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது.  

இந்த பூங்காவில் 46-க்கும் மேற்பட்ட வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.  புல்வெளிகளும், பூச்செடிகளும் அவற்றில் பூத்துக் குலுங்கும் பூக்களும் உங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஆங்காங்கே சில பெயர் பலகைகள் - பூக்கள்/செடிகளின் பெயர்கள், பட்டாம்பூச்சிகளின் வகைகள், அவற்றின் பெயர்கள் எனப் பார்வையாளர்களுக்குத் தகவல் தெரிந்துகொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த சின்யா, டிரைக்டரி, கொரட்டல் ஏரியா, பென்டாஸ், கொன்றை, மேரி கோல்டு பூச்செடிகள், செண்பக மரம், மகிழ மரம், எனச் சுமார் 300க்கும் மேற்பட்ட பல்வேறு வகை வகையான தாவரங்கள் உள்ளன. வண்ணத்துப்பூச்சிகளின்  உருவத்தில் குகை வழிப்பாதைகள், மரங்கள் மற்றும் செடிகளுடன் ,கூடிய நட்சத்திர வனம், புல்தரைகள், பல்வேறு நீர்த் தாவரங்கள் அடங்கிய குட்டைகள், பிரமாண்ட வண்ணத்துப்பூச்சி சிலைகள், என அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள செயற்கை நீரூற்றுகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தப் பூங்காவுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் 2,000-க்கும் மேற்பட்டோரும், வார நாட்களில் 800 பேருக்கும் மேல் வந்து செல்வார்கள், குறிப்பாக அரசுப் பேருந்தை அதிகமாக இயக்கினால், பூங்காவுக்கு வருவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மொத்தத்தில் இந்த வண்ணத்துப் பூச்சி பூங்கா அனைவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இடமாகவும், பார்ப்பதற்கே மிகவும் அழகான, மன அமைதி தரும் இடமாகவும் மாறி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு அடுத்து பெரிய அளவில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம் எதுவும் இல்லாததால் ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டது.

திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் பூங்கா சரகத்தின்கீழ், இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு குடும்பத்தினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா வாரத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் மூடப்பட்டு இருக்கும். ஆனால், தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மற்றும் குடும்பத்தினர் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இப்பூங்கா, மே மாதம் முழுவதும் விடுமுறையின்றி செயல்படும் என மாவட்ட வன அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget