பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு... திமுக அரசை கண்டித்து அதிமுக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
பாலியல் குற்ற சம்பவம் 23 சதவீதம் உயர்ந்துள்ளது, இந்த ஆண்டு வழக்கு 30 சதவீதம் கூடுதலாக உயர்ந்துள்ளது,2022ம் ஆண்டு 4 ஆயிரத்து 211 வழக்குகள்,2021ல் 4 ஆயிரத்து 470 வழக்குகள்.

தஞ்சாவூர்: பாலியல் வன்கொடுமைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் திமுக அரசை கண்டித்து மாநகர கழகம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது,
தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதை தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தடுக்க திராணியற்று வேடிக்கை பார்த்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணத்தில் தனியார் கடையில் பணிபுரிந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், திமுகவின் நிர்வாக சீர்கேட்டிற்கு சாட்சியாக. சிறுமி முதல் முதியோர் வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் அதிமுக தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான மா.சேகர் வரவேற்றார். அமைப்புச் செயலாளர்கள் ஆர் காந்தி, துரை செந்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதி மோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சிவி சேகர், மாநகர செயலாளர் என் எஸ் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி,உதயகுமார் பேசுகையில், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பாலியல் குற்ற சம்பவம் 23 சதவீதம் உயர்ந்துள்ளது, இந்த ஆண்டு வழக்கு 30 சதவீதம் கூடுதலாக உயர்ந்துள்ளது,2022ம் ஆண்டு 4 ஆயிரத்து 211 வழக்குகள்,2021ல் 4 ஆயிரத்து 470 வழக்குகள், 2024ல் 6 ஆயிரத்து 920 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 18 ஆயிரத்து 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஆட்சி அதிகாரம் எதற்கு? நல்லதை ஊக்கப்படுத்தவும், கெட்டதை தடுத்து நிறுத்தவும் தான். காவல்துறை என்று ஒன்று தமிழ்நாட்டிலே இருக்கிறதா? குற்றம் நடந்தது என்று சொன்னால் எங்களுக்கு கோவம் வரும் என முதல்வர் சொல்லகிறார். குற்றவாளிகள் காவல்துறையை கண்டு பயப்பட வேண்டாமா. இதனால் தான் பொதுச்செயலாளர் பழனிசாமி யார் அந்த சார்? யார் அந்த தம்பி? யார் அந்த வி.ஐ.பி.,? யார் எந்த தியாகி? யார் அந்த குற்றவாளி? என சட்டசபையில் கேட்டார். எதுக்கும் பதில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை. திருஞானம், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் துரை,வீரணன், அம்மா பேரவை இணைச் செயலாளர் அறிவுடை நம்பி, விவசாய பிரிவு செயலாளர் ராஜமாணிக்கம், துணைச் செயலாளர் சிங்ஜெகதீசன், மருத்துவ பிரிவு துணைச் செயலாளர் கருணாநிதி மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு இப்போது, யார் அந்த சார், யார் அந்த தம்பி, யார் அந்த தியாகி என அந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக டெல்லி செல்கிறாரோ என்ற சந்தேகம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது, 100 நாள் சம்பளத்தை கூட 38 எம்பிக்களை வைத்துக்கொண்டு அவரால் வாங்கித் தர முடியாததை அதிமுக வாங்கி கொடுத்துள்ளது.
2011ல் மின்வெட்டால் திமுக ஆட்சியை இழந்தது, அதைப்போல் 2026ல் அளவுகடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் வீட்டிற்கு செல்லும், 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை, நாட்டு மக்களுக்காக டெல்லி செல்லவில்லை, வீட்டிற்காக செல்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




















