மேலும் அறிய
Advertisement
நாகப்பட்டினம் கடற்கரையில் திடீர் சுழற்காற்று...! - மீன்வலைக்கட்டுகள் காற்றில் பறந்ததால் மீனவர்கள் ஓட்டம்
கடலில் ஏற்பட்ட சூறாவளி காற்று கோடியக்கரை கடற்கரைக்கு வந்தடைந்தது கரையிலும் ஏற்பட்ட திடீர் சுழல் காற்றினால் - 50 கிலோ எடை கொண்ட மீன் வலைக் கட்டுகள் பறந்தன.மீனவர்கள் அலறியடித்து ஓட்டம்.
சுழல் காற்று (Tornado) என்பது மின்னலையும், இடியையும் தோற்றுவிக்கக்கூடிய முகிலொன்றின் உட்பகுதியில் இருந்து தொடங்கி நிலமட்டம் வரை நீட்சியடைந்த, கூடிய வேகத்துடன் சுழல்கின்ற வளிநிரல் ஆகும். இச்சுழல் காற்று சிறிய அளவிலான சூறாவளியாகும். இதை சூறாவளி என்றும் கூறுவர். கடும் இடி, மின்னல், புயல்கள் ஏற்படும் போதே டொர்னாடோக்கள் உருவாகின்றன. இவை சூறாவளியிலும் பார்க்க பயங்கரமானவை. இவை குறுகிய நேரத்தில் குறுகிய இடத்தில் அழிவை ஏற்படுத்தக்கூடியன.
நாகை மாவட்ட கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சூறாவளி
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி படகு துறைமுகம் அருகே கடல் பகுதியில் இருந்து ஒரு சுழல் காற்று கரையை நோக்கி வருவது தெரிந்தது. ஆச்சரியத்துடன் பார்த்த மீனவர்கள் கடற்கரைப் பகுதியில் இருந்த அதை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். மீண்டும் கரை அருகே வந்தபோது சுழற்காற்றின் வேகம் அதிகரித்தது. எடை குறைந்த பொருட்கள் மட்டுமல்லாமல் 50 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலை கட்டுகளும் வானில் பறந்து மேலே இழுத்துச் செல்லப்பட்டு சுழன்று மீண்டும் கீழே விழுந்தது.
இந்நிகழ்வை தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பலர் ஓட்டம் பிடித்தனர். மீன் ஏற்றுவதற்காக கடற்கரையில நின்றிருந்த சரக்கு வாகனம் ஒன்றும் சுழல்காற்றின் தாக்குதலுக்கு உள்ளாகி குலுங்கி, குலுங்கி ஆட்டம் கண்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion