மேலும் அறிய

பட்டினப் பிரவேசம் தடை உத்தரவைத் திரும்பப் பெறவில்லை என்றால், உயிர் துறக்கத் தயார் - அகில இந்திய முக்குலத்தோர் பாசறை!

தருமபுரம் ஆதீன  பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்ததை திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய முக்குலத்தோர் பாசறையினர் தூக்குக் கயிறை மாற்றிக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் இவ்வாதீனத்தின் குருமுதல்வரின் குருபூஜை தினத்தன்று தருமபுரம் ஆதீனகர்த்தர் பட்டினப் பிரவேசம் மேற்கொள்வார். ஆதீனகர்த்தரை சொக்கநாத பெருமானாக பாவித்து பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கிச் செல்வது வழக்கம். பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் பொதுமக்கள் வீடுகளில் விளக்கேற்றி பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து வணங்கி வழிபாடு மேற்கொள்வர். பின்னர் ஆதீனகர்தர் கொலுபீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். இந்த பாரம்பரிய ஆன்மீக மரபுகள் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. 

பட்டினப் பிரவேசம் தடை உத்தரவைத் திரும்பப் பெறவில்லை என்றால், உயிர் துறக்கத் தயார் - அகில இந்திய முக்குலத்தோர் பாசறை!

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெறவுள்ள ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை  (ஆதீனகர்த்தரை) பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் தூக்கி செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அறிக்கையில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை தடை செய்திட கேட்டுகொண்டதன் பேரில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-இன்படி சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலும் பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீனகர்த்தரை  பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.

பட்டினப் பிரவேசம் தடை உத்தரவைத் திரும்பப் பெறவில்லை என்றால், உயிர் துறக்கத் தயார் - அகில இந்திய முக்குலத்தோர் பாசறை!

இந்த உத்தரவிற்கு மதுரை ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனகர்த்தர்கள் மற்றும் ஆன்மீக  பேரவைகளை கண்டனம் தெரிவித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அப்பகுதி கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை தருமபுர ஆதீன நுழைவு வாயில்  முன்பு  அகில இந்திய முக்குலத்தோர் பாசறையினர் தூக்கு கயிற்றை தலையில் மாட்டிக்கொண்டு நூதன முறையில் தடை உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டினப் பிரவேசம் தடை உத்தரவைத் திரும்பப் பெறவில்லை என்றால், உயிர் துறக்கத் தயார் - அகில இந்திய முக்குலத்தோர் பாசறை!

மாவட்ட இளைஞரணி செயலாளர் கில்லி பிரகாஷ், நகர செயலாளர் முத்து முரளி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தூக்குக் கயிற்றை கழுத்தில் மாற்றி 500 ஆண்டுகளாக நடைபெறும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதித்ததை திரும்பப் பெற வலியுறுத்தியும், திரும்பப் பெறவில்லை என்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வோம் என்பதை வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Xi: கூடி கும்மாளாம் அடிக்கும் மோடி, புதின், ஜி ஜிங்பிங் - குபுகுபுவென வயிறு எரியும் ட்ரம்ப் - வீடியோ வைரல்
Modi Putin Xi: கூடி கும்மாளாம் அடிக்கும் மோடி, புதின், ஜி ஜிங்பிங் - குபுகுபுவென வயிறு எரியும் ட்ரம்ப் - வீடியோ வைரல்
Modi Jinping Putin: பாத்து சார், அமெரிக்காவுக்கு வயிறு எரியப்போகுது.!! சீனாவில் சிரித்துப் பேசி மகிழ்ந்த மோடி, ஜின்பிங், புதின்
பாத்து சார், அமெரிக்காவுக்கு வயிறு எரியப்போகுது.!! சீனாவில் சிரித்துப் பேசி மகிழ்ந்த மோடி, ஜின்பிங், புதின்
Commercial Cylinder: செப்டம்பர் 1-ம் தேதியே மகிழ்ச்சியான செய்தி; வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு - முழு விவரம்
செப்டம்பர் 1-ம் தேதியே மகிழ்ச்சியான செய்தி; வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு - முழு விவரம்
New Toll System: சுங்கச்சாவடிகள்ல இனி நிற்க வேண்டாம்; கட்டணம் இல்லைன்னு நினைச்சுடாதீங்க, விஷயமே வேற..
சுங்கச்சாவடிகள்ல இனி நிற்க வேண்டாம்; கட்டணம் இல்லைன்னு நினைச்சுடாதீங்க, விஷயமே வேற..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madhampatti Rangaraj : ’Oii பொண்டாட்டி...மாதம்பட்டி அட்ராசிட்டி!’’வீடியோ வெளியிட்ட ஜாய்
போடியில் களமிறங்கும் அதிமுகவினர் வளர்த்தவர்களே எதிராக சதி ராமநாதபுரமே செல்லும் OPS? | OPS Ramanathapuram
”தமிழ் நடிகர்களை விட இந்தியில்...மட்டம் தட்டிய ஜோதிகா”பதிலடி கொடுக்கும் ரசிகர்கள் Jyotika on Tamil actors
சங்கர் ஜிவாலுக்கு புது பதவி! பொறுப்பை ஒப்படைத்த ஸ்டாலின்
Mohan Bhagwat on Modi : ’’75 வயதில் ஓய்வு?நான் அப்படி சொல்லல’’RSS தலைவர் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Xi: கூடி கும்மாளாம் அடிக்கும் மோடி, புதின், ஜி ஜிங்பிங் - குபுகுபுவென வயிறு எரியும் ட்ரம்ப் - வீடியோ வைரல்
Modi Putin Xi: கூடி கும்மாளாம் அடிக்கும் மோடி, புதின், ஜி ஜிங்பிங் - குபுகுபுவென வயிறு எரியும் ட்ரம்ப் - வீடியோ வைரல்
Modi Jinping Putin: பாத்து சார், அமெரிக்காவுக்கு வயிறு எரியப்போகுது.!! சீனாவில் சிரித்துப் பேசி மகிழ்ந்த மோடி, ஜின்பிங், புதின்
பாத்து சார், அமெரிக்காவுக்கு வயிறு எரியப்போகுது.!! சீனாவில் சிரித்துப் பேசி மகிழ்ந்த மோடி, ஜின்பிங், புதின்
Commercial Cylinder: செப்டம்பர் 1-ம் தேதியே மகிழ்ச்சியான செய்தி; வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு - முழு விவரம்
செப்டம்பர் 1-ம் தேதியே மகிழ்ச்சியான செய்தி; வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு - முழு விவரம்
New Toll System: சுங்கச்சாவடிகள்ல இனி நிற்க வேண்டாம்; கட்டணம் இல்லைன்னு நினைச்சுடாதீங்க, விஷயமே வேற..
சுங்கச்சாவடிகள்ல இனி நிற்க வேண்டாம்; கட்டணம் இல்லைன்னு நினைச்சுடாதீங்க, விஷயமே வேற..
Resale Value Comparison: ரீசேல் செய்யும்போது எந்த காருக்கு அதிக லாபம் கிடைக்கும்? டாடா Vs மாருதி Vs ஹுண்டாய்
Resale Value Comparison: ரீசேல் செய்யும்போது எந்த காருக்கு அதிக லாபம் கிடைக்கும்? டாடா Vs மாருதி Vs ஹுண்டாய்
டிஜிபி பதவியேற்பு விழாவை புறக்கணித்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள்.. முதல்வர் இல்லாத நேரத்தில் இப்படியா?
டிஜிபி பதவியேற்பு விழாவை புறக்கணித்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள்.. முதல்வர் இல்லாத நேரத்தில் இப்படியா?
India China: சீனா சொன்ன பஞ்சசீல் என்றால் என்ன? யானையும் ட்ராகனும் ஒன்று சேருமா? ட்ரம்புக்கான சேதி
India China: சீனா சொன்ன பஞ்சசீல் என்றால் என்ன? யானையும் ட்ராகனும் ஒன்று சேருமா? ட்ரம்புக்கான சேதி
PM Modi-Xi Jinping: ”பீஸ் வந்தா மாஸ் காட்டலாம்” சீன அதிபரிடம் எடுத்துச் சொன்ன பிரதமர் மோடி - நட்பு முக்கியம்
PM Modi-Xi Jinping: ”பீஸ் வந்தா மாஸ் காட்டலாம்” சீன அதிபரிடம் எடுத்துச் சொன்ன பிரதமர் மோடி - நட்பு முக்கியம்
Embed widget