மேலும் அறிய
Advertisement
நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காள கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 630 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 670 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
திடீர் காற்றோடு மழை பெய்யக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது குறிக்கும் வகையில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. இருந்த போதும் நாகை மாவட்டத்தில் வெயில் அடித்தே வருகிறது. கடந்த ஒன்பதாம் தேதி குறைந்த தாழ்வு நிலையை உருவாக்க கூடும் என 7ம் தேதியே மீன்வளத் துறையினர் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என அறிவித்திருந்தனர். அதற்கு முன்பாகவே நான்கு நாட்களாக கடல் சீற்றம் காரணமாக அக்கரை பேட்டை கீச்சாங்குப்பம் கல்லார் செலுதூர் விழுந்தமாவடி புஷ்பவனம் ஆற்காட்டு துறை கோடியக்கரை வேதாரணியம் உள்ளிட்ட 27 மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லாத விசைப்படகு மீனவர்கள் இன்று 19வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமத்தைச் சேர்ந்த 700 விசைப்படகுகளும் 3000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீன் வரத்து இல்லாத காரணத்தால் நாகை மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாத காரணத்தால் மீன் வரத்து குறைந்து போனதால் நாள் ஒன்றுக்கு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் அன்னி செலாவணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion