மேலும் அறிய

தஞ்சையில் திருட்டுப்போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

சில செல்போன்கள் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் சில இடங்களில் உள்ள கடைகளில் விற்கப்பட்டதும் தெரியவந்தது. அதனை ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.

தஞ்சாவூரில் திருடப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் தஞ்சை போலீசார் வழங்கினர்.

தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ராசா மிராசுதாரர் மருத்துவமனை உள்பட மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் , ஏட்டு செந்தில் குமார் மற்றும் போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மாயமான செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் சிலர் ஏற்கனவே கடைகளில் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபர்களிடம் செல்போன்களை போலீசார் மீட்டனர். மேலும் சில செல்போன்கள் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் சில இடங்களில் உள்ள கடைகளில் விற்கப்பட்டதும் தெரியவந்தது. அதனை ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.

சில செல்போன்களை கீழே கிடந்ததாக பொதுமக்கள் சிலர் போலீசிடம் ஒப்படைத்தனர். இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னிலையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். அப்போது அவர், கஷ்டப்பட்டு செல்போன்கள் வாங்குகிறீர்கள். அதனை சரியான முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.

அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை மாவட்டம் கரம்பயம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டதும் பணியாளர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று பராமரிப்பு பணிகளை பார்ப்பதற்காக சென்றுவிட்டனர்.

இந்த நேரத்தில் கரம்பயம் துணை மின் நிலையத்தில் எந்திரங்களும் மின்மாற்றிகளும் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக தஞ்சை மின் மானி சோதனை கூட உதவி பொறியாளர் சிவபெருமாள், தொழில்நுட்ப உதவியாளர் ராம்குமார், எந்திர பராமரிப்பு பணி மேற்பார்வையாளர் ராஜேந்திர விக்னேஷ் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர்.

அப்போது தஞ்சை மின் மானி சோதனை கூட உதவி பொறியாளர் சிவபெருமாள் கூறியதாவது:-;தஞ்சை மின் மானி சோதனை கூடத்துக்கு உட்பட்ட 70 துணை மின் நிலையங்களுக்கு மின் நிறுத்தம் செய்யும் தினத்தில் அந்தந்த துணை மின் நிலையத்தில் எந்திரங்கள் சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக வருவோம்.

தொடர்ந்து பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்வோம். ஒரு துணை மின் நிலையத்தில் வருடத்திற்கு ஒரு முறை தான் ஆய்வு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget