மேலும் அறிய

தஞ்சையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

தஞ்சை மாவட்டத்தில் இன்று 2305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று  சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க தஞ்சை மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களாலும், தாசில்தார் அலுவலகங்களிலும் படிவம் 6பி-ல் வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டு வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 20 லட்சத்து 29 ஆயிரத்து 246 வாக்காளர்களில் 13 லட்சத்து 46 ஆயிரத்து 249 வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். இது 66.34 சதவீதமாகும். பொதுமக்களின் வசதிக்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் உள்ள 2,305 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ள வேண்டும். மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வருகிற 31-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். சிறப்பு முகாம்கள் நடைபெறாத நாட்களில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் உள்ள தேர்தல் துணை தாசில்தார்களிடமோ அல்லது தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களிடமோ வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், செல்போன் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து வழங்கலாம்.

இவற்றின் மூலம் தங்களது செல்போன் மூலமே வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி விவரங்களும் செல்போன் எண்ணிற்கே கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை சமீபகாலங்களாக அதிகரித்துள்ளது. ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் உள்ளது. பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து இடங்களிலும் 1 வார்டில் இருக்கும் வாக்காளரின் பெயர் 6, 7 என இரண்டிற்கும் மேற்பட்ட வார்டுகளில் இருக்கும்.

வாக்களிக்கச் செல்லும் போது தான் நாம் எதற்கு வாக்களிக்க வேண்டும்? என்ற குழப்பம் வாக்காளர்களுக்கு ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து தொடங்கியது. இப்பணிகளை வரும் மார்ச் 31, 2023க்குள் முடிக்கும் வகையில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget