கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் தாலுகாக்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல உள்ளூர் லாரிகளையே பயன்படுத்த வேண்டும்.

கும்பகோணம்: கும்பகோணம் தாசில்தார் அலுவலகம் முன்பு, தஞ்சை மாவட்ட கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரவு திடீர் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் செல்வராஜ், செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாநிலத் துணைத் தலைவர் ஜெயபால் கலந்து கொண்டு பேசினார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு டிஜிட்டல் வரிசை முறையை அமல்படுத்த வேண்டும்; முறைகேட்டில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் தாலுகாக்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல உள்ளூர் லாரிகளையே பயன்படுத்த வேண்டும். தஞ்சையில் வழங்கப்படுவதைப் போல கும்பகோணத்திலும் லாரிகளுக்கு சமமான வாடகை வழங்க வேண்டும். பல நாட்களாக சரக்குகளுக்காக காத்திருக்கும் உள்ளூர் லாரிகளை புறக்கணித்து வெளியூர் லாரிகளைப் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் தாசில்தார் பூங்கொடி, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆத்மநாதன் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர்.
தீவிபத்தில் இருந்து தப்பிய நெற்பயிர்கள்
கும்பகோணம் சோலையப்பன் தெரு பகுதியில் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வயல் உள்ளது. இங்கு நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. இந்த வயலின் அருகே வளர்ந்திருந்த கருவேல மரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டப்பட்டன. இதன் மரக்கழிவுகள் அகற்றப்படாமல், காய்ந்த நிலையில் அப்பகுதியில் கிடந்தன.
இந்நிலையில், நேற்று மாலை அடையாளம் தெரியாத சிலர் மரக்கழிவுகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. காய்ந்த மரக்கழிவுகள் காரணமாக தீ மளமளவென பரவி, அருகில் இருந்த வயலுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், அறுவடைக்கு தயாராக இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நெற்பயிர்கள் தீ விபத்தில் இருந்து தப்பின. மரக்கழிவுகளுக்கு தீ வைத்தவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் விவசாயிகள் விளைவித்த சாகுபடி பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில்
இவ்வாறு தீவிபத்தில் சிக்கியிருந்தால் பெரும் பொருளாதார நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து இருப்பார்கள். தண்ணீர் வராத நிலையில் பம்ப்செட்டை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அதிக கடனுக்கு வவிசாயிகள் உள்ளாகி உள்ளனர். இவ்வாறு தீ போன்ற விபத்தில் மேலும் பொருளாதார சரிவை சந்தித்து இருப்பார்கள். அதிர்ஷ்டவசமாக நெற்பயிர்கள் தப்பித்துள்ளது. விரைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் நெற்பயிர்கள் தப்பியது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















