மேலும் அறிய

நாகை : வெளிமாநிலங்களுக்கு கடத்தல் செய்யவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் குதிரைகள் பறிமுதல்

ரூ.20 லட்சம் மதிப்பிலான 1079 கிலோ கடல் குதிரை,கடல் அட்டைகள், சுறாமீன் இறக்கைள் ஆகியவற்றை நாகை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய முருகானந்தத்தை தேடி வருகின்றனர்.

அக்கரைப்பேட்டை அருகே காட்டுப் பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்தயிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 1079கிலோ
 கடல் குதிரை,கடல் அட்டைகள், சுறாமீன் இறக்கைள் ஆகியவற்றை நாகை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய முருகானந்தத்தை தேடி வருகின்றனர்.
 
கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு வரை, இந்தியாவிலும் கடல்அட்டைகளைப் பிடிக்க அனுமதி இருந்தது. அதன் பின்னர் கடந்த 21 வருடங்களாக அவற்றைப் பிடிக்க தடை இருந்து வருகிறது. இதன் வரிசையில் மொத்தம் 53 கடல் வாழ் உயிரினங்கள் பிடிப்பதற்குத் தடை இருக்கிறது.  இவைகளுக்கு சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அமோக வரவேற்பு உண்டு. இதை அந்நாட்டு மக்கள் உணவுக்காகவும், மருந்துக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவற்றில் பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு ரகத்துக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் ராஜ கடல் அட்டையானது அதிகமான விலைக்குப் போகும்.
 
நாகை : வெளிமாநிலங்களுக்கு கடத்தல் செய்யவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் குதிரைகள் பறிமுதல்
 
இவை அதிகமாகப் பிடிக்கப்பட்டால் அந்த இனம் அழிந்துவிடும் என்பது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பு வாதமாக முன் வைக்கப்படுகிறது.  அவை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுமார் 10 லட்சம் குஞ்சுகளை பொறிக்கும் என மீனவர்கள் தரப்பிலும் சொல்லப்படுகிறது. இந்தத் தடையை நீக்குவதற்காக மீனவர்கள் சார்பாக கோரிக்கை எழுந்து வந்தது ஆனால், மத்திய அரசு செவிசாய்கவில்லை. 
 
கடல் அட்டைகளுக்கு எனத் தனியாக வலை கிடையாது. மீன் பிடிக்கும் வலையில் கடல் அட்டைகள் மாட்டிக் கொண்டு கரைக்குக் கொண்டு வந்தால் மீனவனுக்கு  சிறைவாசமும், ரூபாய்  அபராதமும் விதிக்கப்படும். மீன்களைப் பிடிக்கும்போது, எதிர்பாராமல் வலையில் மாட்டிக் கொள்ளும் அவற்றால் சிறைவாசம் அனுபவித்த மீனவர்கள் ஏராளம். ஆனால், தடை செய்யப்பட்ட ஒன்றைத் திட்டமிட்டு விற்பனை செய்ய ஒரு சிலர் இருக்கதான் செய்கின்றனர். அதேபோலத்தான் தமிழ்நாட்டிலும் இதற்கு ஒரு நெட்வொர்க் இருக்கிறது அதில் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பணத்தாசையில் சிக்கியுள்ளனர். அவர்களை கண்காணிக்கும் பணியில் வனத்துறை கடலோர காவல் துறை என பல்வேறு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
நாகை : வெளிமாநிலங்களுக்கு கடத்தல் செய்யவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் குதிரைகள் பறிமுதல்
 
அப்போது நாகையில் இருந்து கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகள், கடல் குதிரைகள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நாகை அக்கரைபேட்டை மாரியம்மன்கோயிலுக்கு தென்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட 812 கிலோ கடல் அட்டைகள், 248 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், பதப்படுத்தப்பட்ட 15 கிலோ எடையுடைய சுறா மீனின் இறக்கைகள், பதப்படுத்தப்பட்ட 4 கிலோ கடல் குதிரை  ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
நாகை : வெளிமாநிலங்களுக்கு கடத்தல் செய்யவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் குதிரைகள் பறிமுதல்
 
இவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். மேலும் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட உபகரணங்களான அடுப்பு -1, சிலிண்ர் -2, எடைபோடும் தராசு- 1, பிளாஸ்டிக் ஐஸ் பெட்டிகள் -34 ஆகியவை இருப்பது தெரியவந்தது-. இவற்றை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை மேற்கொண்டனர். இதில் நாகை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம்(51) என்பவர் பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பதும், கடலோர காவல் குழும போலீசார் வந்தவுடன் தப்பி சென்றதும் தெரியவந்தது. தப்பியோடிய முருகானந்தத்தை தேடி வருகின்றனர். கைப்பற்றிய பொருட்களை பறிமுதல் செய்து நாகை வனசரக அலுவலத்தில் கடலோர காவல் குழும போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget