மேலும் அறிய

தஞ்சையில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்!

தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் தியாகராஜன் வெளியிட்டார்.

தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வெளியிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி (பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வெளியிட்டார். அக்டோபர் 2023 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்களார் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 974896 ஆண் வாக்காளர்களும், 10,25,988 பெண் வாக்காளர்களும், 156 இதர பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் வாக்காளர்கள் 2001040 உள்ளனர்.

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் 1,27,433 ஆண் வாக்காளர்களும், 1,30011 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,57,456 வாக்காளர்கள் உள்ளனர். கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் 1,28,382 ஆண் வாக்காளர்களும், 1,34,913 பெண் வாக்காளர்கள் மற்றும் 14 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,63,309 வாக்காளர்கள் உள்ளனர். பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 1,25,520 ஆண் வாக்காளர்களும், 1,31,058 பெண் வாக்காளர்கள் மற்றும் 18 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,56,596 வாக்காளர்கள் உள்ளனர். 

திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் 1,28,764 ஆண் வாக்காளர்களும், 1,34,869 பெண் வாக்காளர்கள் மற்றும் 20 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,63,653 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் 1,29,254 ஆண் வாக்காளர்களும், 1,40,860 பெண் வாக்காளர்கள் மற்றும் 57 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,70,171 வாக்காளர்கள் உள்ளனர். ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 1,17,411 ஆண் வாக்காளர்களும், 1,24,146 பெண் வாக்காளர்கள் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,41.560 வாக்காளர்கள் உள்ளனர்.  

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,14,504 ஆண் வாக்காளர்களும், 1,24,053 பெண் வாக்காளர்கள் மற்றும் 24 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,38,581 வாக்காளர்கள் உள்ளனர்.  பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் 1,03,628 ஆண் வாக்காளர்களும், 1,06,078 பெண் வாக்காளர்கள் மற்றும் 8 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,09,714 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 05.01.2023 முதல் 26.10.2023 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களின் படிவங்கள் ஏற்கப்பட்டு 14.313 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், இறந்த, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது. 56,389 நபர்களின் பெயர்களை விசாரணை அடிப்படையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வரும் 26.12.2023 வரை வைக்கப்படும்.

4 நாட்கள் சிறப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். வரும் 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நான்கு நாட்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது மற்றும் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 

நிகழ்ச்சியில் திமுக சார்பில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை தஞ்சை மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, ஆற்காடு புண்ணியமூர்த்தி, அதிமுக சார்பில் மாநகர செயலாளர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாநகர துணை செயலாளர் முத்துக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
Embed widget