தஞ்சையில் திமுக மாநகர இளைஞர் அணி சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தஞ்சையில் மாநகர இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101- வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்: தஞ்சையில் திமுக மாநகர இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101- வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம்
தஞ்சை மாநகர இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு 101வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தஞ்சை கொண்டிராஜபாளையம் அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி. கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
நிர்வாகிகள் பங்கேற்பு
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மண்டலக் குழுத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட துணைச் செயலாளர் கனகவள்ளி பாலாஜி, மாநகர அவைத் தலைவர் சுப்பிரமணியன், மாநகரத் துணைச் செயலாளர் எழில், மாநகர பொருளாளர் காளையார் சரவணன், பகுதி செயலாளர்கள் மேத்தா, கார்த்திகேயன், ரம்யா சரவணன், தலைமை கழக பேச்சாளர் வரகூர் காமராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தமிழ் செல்வன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் வாசிம் ராஜா, விஜய் பிரசாந்த், மதி பாலன், திருஞானசம்பந்தம், மாநகர அணி அமைப்பாளர் தமிழரசி ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
முன்னதாக ஏழை, எளிய மக்களுக்கு தையல் மிஷின், மூன்று சக்கர சைக்கிள், சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகில் வேந்தன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் தஞ்சை பிரபு நன்றி கூறினார். இதில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.