மேலும் அறிய
உதவி திட்ட அலுவலகர்களுக்கான ஊதியம் வழங்க கோரி நாகையில் போராட்டம்
மற்ற மாவட்டங்களை வழங்கியதைப் போல உடனடியாக உதவி திட்ட அலுவலர் காண ஊதியத்தை வழங்கிட வேண்டும் என கோரிக்கை

அரசு ஊழியர்கள் போராட்டம்
நாகை மாவட்டத்தில் பணிபுரிகின்ற உதவி திட்ட அலுவலர் களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் 7 மாதங்களுக்கு மேலாக ஊதியத்தை வழங்க மறுக்கப்படுகின்ற விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் திட்ட அலுவலரை நேரடியாகச் சந்தித்த போது அவர்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் எனவே அதற்குப் பின்னர்தான் ஊதியம் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களில் பணிபுரியும் கூடிய அனைத்து உதவித் திட்ட அலுவலர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டு விட்டது.

நாகை மாவட்டத்தில் மட்டும் அரசிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது ஆடிட் அப்ஜெக்ஷன் வரும் என்று கூறுகிறார், ஆனால் ஆடிட் அப்ஜெக்ஷன் வரும் என்று கூறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஊதியத்தை நிறுத்தி விட்டார். மற்ற மாவட்டங்களை வழங்கியதைப் போல உடனடியாக உதவி திட்ட அலுவலர் காண ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















