மேலும் அறிய
Advertisement
வன்னியர் சங்க மாநிலத் துணைத்தலைவரை கொலைசெய்ய முயன்றதாக பாமக மாநில துணைப்பொதுச்செயலாளர் கைது..!
கடந்த வாரம் ம.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டலும், அவரை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக நான்கு பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். மேலும் இந்த கொலை மிரட்டல் பின்னணியில் லாலி மணிகண்டன் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் சிறையில் இருந்த லாலி மணிகண்டன் இரு தினங்களுக்கு முன் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையில், கொலை மிரட்டல் தொடர்பாக பாமக மாநில துணைத் தலைவரான கும்பகோணம் அருகே கொத்தங்குடியைச் சேர்ந்த கே.ஆர்.வெங்கட்ராமனுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
வன்னியர் சங்க மாநில துணைத் தலைவரை கொலை செய்ய முயன்றதாக பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.ஆர் வெங்கட்ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கும்பகோணம் வன்னியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் ம.க.ஸ்டாலினை கொலைசெய்ய முயன்றதாக பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ஆர்.வெங்கட்ராமன்(42) என்பவர் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் அருகே மருத்துவக்குடியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். இவர் வன்னியர் சங்கத்தில் மாநில துணைத் தலைவராக உள்ளார். இவரது தம்பி ம.க.ராஜா என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமரூதுரைச் சேர்ந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டன் உள்ளிட்டோர் மீது போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், கடந்த வாரம் ம.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டலும், அவரை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக நான்கு பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். மேலும் இந்த கொலை மிரட்டல் பின்னணியில் லாலி மணிகண்டன் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் சிறையில் இருந்த லாலி மணிகண்டன் இரு தினங்களுக்கு முன் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையில், கொலை மிரட்டல் தொடர்பாக பாமக மாநில துணைத் தலைவரான கும்பகோணம் அருகே கொத்தங்குடியைச் சேர்ந்த கே.ஆர்.வெங்கட்ராமனுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து திருவிடைமருதூர் போலீஸார் கே.ஆர்.வெங்கட்ராமனை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்து வந்த நிலையில், இன்று காலை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது: லாலிமணிகண்டனின் நண்பரான செல்வக்குமாரை ம.க.ஸ்டாலின் தரப்பினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தனர். அதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் தான் ம.க.ராஜா கொலை செய்யப்பட்டார். ம.க.ராஜாவை கொலை செய்தவர்களை பழிவாங்கும் நோக்கில், லாலி மணிகண்டன் தரப்பினர் கோவை சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த மூன்றுபேரை வெட்டிக் கொன்றனர். இந்த கொலை வழக்கில் ம.க.ஸ்டாலினும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 13-ம் தேதி மருத்துவக்குடிக்கு சென்று காவல் துறையினர், ம.க.ஸ்டாலினிடம் உங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீங்கள் வெளியே எங்கும் செல்லவேண்டாம் என கூறினர்.
இதையடுத்து அடுத்த சில நாட்களில் அந்த பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததாக மகேஸ், செந்தமிழ்செல்வன், முகமதுஆசீக், மணிகண்டன் என நான்குபேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, ம.க.ஸ்டாலினை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தெரியவந்தது. இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என போலீஸார் விசாரித்த போது, சேலம் சிறையில் உள்ள பிரபல ரவுடியான லாலி மணிகண்டனும், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் வெங்கட்ராமனிடம் போலிஸார் விசாரித்த போது, சில தொலைபேசி உரையாடல்கள் சிக்கியது. அதன் அடிப்படையில் வெங்கட்ராமனை கைது செய்துள்ளனர். மேலும், கட்சிக்குள் யார் பெரியவர்கள் என்ற ரீதியில் ம.க.ஸ்டாலினும், வெங்கட்ராமனும் அவ்வப்போது மோதிக்கொண்டு இருந்ததால், ஸ்டாலினை கொலை செய்ய வெங்கட்ராமன் சதி திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது என்றனர் போலீஸார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion