ஓட்டுனர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம்
அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் பெறும் ஓட்டுனர்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலும் கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டத் தலைவர் அன்பழகன் கூறியதாவது: அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் என்எம்ஆர் முறையில் ஊதியம் பெறும் ஓட்டுனர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் தரஊதியம் என்ற அடிப்படையில் தரஊதிய பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓட்டுனர்களாக பணியாற்றும் படித்த இளைஞர்களுக்கு கல்விக்தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும்.
UP Aligarh : புதையும் நிலப்பகுதி.. உச்சகட்ட பரபரப்பு...ஜோஷிமத்தை போலவே உபியிலும் தொடரும் அபாயம்..
அரசுத்துறைகளில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், அரசுத்துறை ஓட்டுனர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், சென்னையில் நடத்தப்பட உள்ள பேரணியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளோம் என்றார்.
Crime: கோவை கார் வெடிப்பு வழக்கு ; கைது செய்யப்பட்ட 6 பேரிடம் என்.ஐ.ஏ. விசாரணை
மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டியை நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022 - 2023 -ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டி பிப்ரவரி 2 -ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 12 வயது மாணவர்கள் தொடங்கி, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். இப்போட்டியை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது.
இதில், கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்த போட்டிகளில் அதிகப்படியான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொள்வதற்கு, மாவட்ட நிர்வாகம், பள்ளிகல்வித்துறை, கல்லூரிகல்வி, மாற்றுத்திறனாளிகள்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி பகுதிகளில் அந்தந்த அலுவலர்கள் மூலம் விளம்பரம் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
Thiruppavai 27:மார்கழி 27...கூடி அமர்ந்து பகிர்ந்தளித்து உணவு உண்ண வேண்டும்- ஆண்டாள்
இப்போட்டிகளில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி விளையாட்டு வீர்கள், வீராங்கனைகள், மாற்றுத்திறனாளிகள், அரசுஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பதிவுசெய்து போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளார்.