வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற ஊராட்சி கவுன்சிலர் - கையெழுத்தை போலியாக போட்டு பணமோசடி செய்யும் ஊராட்சி மன்ற தலைவர்
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் வெளிநாடு சென்ற நிலையில் அவர் கையெழுத்தை போலியாக போட்டு தென்னாம்பட்டினம் ஊராட்சி மன்றத்தில் மோசடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென்னாபட்டினம் ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த சரளா கோபால கிருஷ்ணன் என்பவர் பதவி வகித்து வருகிறார். மொத்தம் ஒன்பது வார்டுகளை கொண்ட இந்த ஊராட்சியில் ஊழல் நடைபெற்று வருவதாக அந்த ஊராட்சியின் 4 வது வார்டு உறுப்பினர் பரணி கண்ணன் என்பர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து தென்னாம்பட்டினம் ஊராட்சியின் 4 ஆவது வார்டு உறுப்பினர் பரணி கண்ணன் கூறுகையில், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தென்னாம்பட்டினம் ஊராட்சியில் அதிமுக, திமுக, பாமக, சுயேட்சை என மொத்தம் 9 வார்டு உறுப்பினர்கள் தேர்வாகிதாகவும், இதில் 6 ஆவது வார்டு உறுப்பினரான செந்தமிழ் செல்வன் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் வெளிநாட்டிக்கு வேலைக்கு சென்று விட்டதாகவும், அதில் இருந்து தற்போது வரை சுமார் 5 மாத காலமாக ஊராட்சி சார்ந்த தீர்மானங்களில் வெளிநாட்டில் உள்ள செந்தமிழ் செல்வன் கையெழுத்தை போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இது குறித்து கேள்வி எழுப்பும் ஒரு சில வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கையாடல் செய்யும் பணத்தில் பங்கு வழங்குவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்னை போன்ற ஊராட்சி உறுப்பினர்களை மீரட்டுவதும், தாங்கள் தேர்வாகியுள்ள வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை எதையும் செய்து தராமல் அலைக்கழிப்பு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
மக்கள் வரிபணத்தை மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை செய்யாமல், செய்ததாக தீர்மானம் இயற்றி அதில் போலி கையெழுத்து இட்டு மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பதவியை ராஜினாமா செய்யாமல் வெளிநாட்டிக்கு சென்றவரை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வேண்டிய சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலரும் இது குறித்து புகார் அளித்தும் அவரும் ஊராட்சி மன்ற நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும்,
மாவட்ட ஆட்சியர் இதனை கவனத்தில் கொண்டு இது போன்று மக்கள் வரி பணத்தை கொள்ளையடிப்பர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து ஊழல் வாதிகளை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற தனது பதவியை ராஜினாமா செய்யாமல் வெளிநாட்டிக்கு வேலைக்கு சென்ற நிலையில் அவர் கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்டு வரும் நிகழ்வு இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயக்க மருந்து கூல்ட்ரிங்ஸ்... இளம்பெண்ணுக்கு 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை: கவுன்சிலர் மகன் கைது!