மேலும் அறிய
Advertisement
விவசாயிகளிடம் இருந்து அன்னிய படுவதை அதிமுக உறுதிப்படுத்தி உள்ளது- பி.ஆர்.பாண்டியன்
’’வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை வரவேற்கிறோம். விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றியையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவித்து கொள்கிறோம்’’
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம் வரவேற்கதக்கது. மேகதாது அணைக்கு எதிராக கேரளாவின் ஆதரவை தமிழக முதலமைச்சர் கோரவேண்டும் பிஆர் பாண்டியன்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது...
மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்தை மாநில அரசுகள், விவசாயிகள் கருத்தை அறியாமல் கொரோனா பேரிடர் காலத்தில் அவசர அவசரமாக ஒரு சில மணி நேரங்களில் முடிவடைந்த பாராளுமன்ற கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்படாமல் விவசாயிகளுக்கு எதிரான பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம் நிறைவேறுவதற்கு தமிழகத்தை அன்றைக்கு ஆட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஆதரித்து தமிழக விவசாயிகள் உடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஆதரித்ததால் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் உலக அரங்கில் தலை குனிய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழக சட்ட மன்றத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தானே முன்மொழிந்து அந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்து வெளிநடப்பு செய்து புறக்கணித்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி தொடர்ந்து விவசாயிகளிடம் அன்னியப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. இச்செயல் தமிழக விவசாயிகளை மீண்டும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் உறுதியோடு சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், அதனை எதிர்த்துப் போராடிய தமிழக விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் முழுமையும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம். விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றியையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கையை மத்திய ஜல்சக்தித்துறையிடம் கொடுக்கப்பட்டு, அதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக ஜல்சக்தி துறை அமைச்சர் தெரிவித்ததாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ள கருத்து மிகுந்த உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசினுடைய கர்நாடக ஆதரவு நிலைபாடு வெளிப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசாங்கம் கர்நாடகத்தின் வரைவுத் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருப்பதை வரவேற்கிறேன். முன்னெச்சரிக்கையாக இந்த வழக்கு தொடரப்பட்டது தமிழக நலனுக்கு ஆதரவானது. அதே நேரத்தில் கடந்த மாதம் நாங்கள் காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை சந்தித்து கர்நாடகம் அளித்துள்ள வரைவுத் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கு பதிலளித்த ஆணையத் தலைவர் ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பதை நான் மட்டும் முடிவு செய்ய இயலாது. ஆணையக் கூட்டத்தில் விவாதித்து பெரும்பான்மை அடிப்படையில் மட்டுமே அது குறித்து முடிவெடுக்க முடியும். எனவே உங்கள் தரப்பு கருத்தையும் நாங்கள் கருத்தில் கொண்டு ஆணையத்தில் முடிவெடுப்போம் என்று உறுதி அளித்தார்.
அவர் சொன்ன அடிப்படையில் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்கள் இத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமேயானால் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவின் வரைவுத் திட்ட அறிக்கையை நிராகரிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவசரமாக கேரளாவின் ஆதரவை தமிழக முதலமைச்சர் கேட்டுப் பெற்று ஆணையக் கூட்டத்தில் கர்நாடகாவின் வரைவுத் திட்ட அறிக்கை நிராகரிப்பதற்கான நடவடிக்கையை போர் கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார். இது குறித்து ஏற்க்கனவே 2017ஆம் ஆண்டில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திந்து ஆதரவு கோரி உள்ளோம். தமிழக அரசு ஆதரவு கோரும்பட்சத்தில் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்துள்ளார் என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion