மேலும் அறிய

நாகப்பட்டினத்தில் கோயில் திருவிழாவின் போது சப்பர சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

நாகை அருகே உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் சப்பர சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் சப்பரம் நள்ளிரவு நடைபெற்றது. சப்பரமானது தெற்கு வீயில்  திரும்பும்பொழுது 10 அடி தூரத்தில் சக்கரத்தில் சிக்கி முட்டுக்கட்டைபோடும் தொழிலாளி அதே பகுதியை சேர்ந்த தீபராஜன் விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த அவரை மீட்டு உறவினர்கள் திருமருகலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். ஆனால், சப்பரத்தின் ராட்சத சக்கரமானாது தீபராஜின் வயிற்றில் ஏறி இறங்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாகை மாவட்டத்தில் வழிபாட்டு தளங்களில் தேர், சப்பரங்கள் இழுக்க முறையான அனுமதி பெற வேண்டும் என எஸ்பி ஜவஹர் உத்தரவிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து உத்திராபதிஸ்வரர் ஆலய நிர்வாகிகள் திருமருகல் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் முறையான அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள் காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் இருந்த  நிலையில், இரவு 11.50 மணிக்கு புறப்பட்ட உத்திராபதிஸ்வரர் சுவாமி சப்பரம் தெற்கு வீதி திரும்பும் பொழுது 10 அடி தூரத்தில் இரவு 12.35 மணிக்கு விபத்துக்குள்ளாகி உள்ளது.

தொடர்ந்து பிரேத பசிசோதனைக்காக தீபராஜன் சடலம்  நாகை அரசு மருத்துவக்கல்லூரியில்  வைக்கப்பட்டுள்ள நிலையில் கோவில் நிர்வாகத்தினர், உறவினர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் திருக்கண்ணபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட அவரும் விசாரணை மேற்கொண்டார்.நாகை அருகே கோவில் திருவிழா சப்பரத்தில் சிக்கி முட்டுக்கட்டை போடும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தீபராஜன் குடும்பத்தினர் காலங்காலமாக முட்டுக்கட்டை போடும் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE:  முதல் பங்கேற்பாளராக ரவீந்தர் சந்திரசேகரனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
Biggboss Tamil Season 8 LIVE: முதல் பங்கேற்பாளராக ரவீந்தர் சந்திரசேகரனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE:  முதல் பங்கேற்பாளராக ரவீந்தர் சந்திரசேகரனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
Biggboss Tamil Season 8 LIVE: முதல் பங்கேற்பாளராக ரவீந்தர் சந்திரசேகரனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Embed widget