மேலும் அறிய

வடமாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு ஊட்டி ஹோலி வாழ்த்து தெரிவித்த மயிலாடுதுறை ஆட்சியர்

மயிலாடுதுறையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., ஆகியோர் குறைகளை கேட்டறிந்தனர்.

கடந்த சில நாட்களாக  பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழ்நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் சொல்லி சில வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அவதூறாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்திருந்தார்.

வடமாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு ஊட்டி ஹோலி  வாழ்த்து தெரிவித்த மயிலாடுதுறை ஆட்சியர்

இதனிடையே பிஹாரில் இருந்து பிஹார் ஐஏஎஸ் அதிகாரிகள் அலோக் குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு வட மாநில தொழிலாளரின் பாதுகாப்பு குறித்து  வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களில் ஆய்வு செய்தனர். அவர்களிடம் வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இங்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்தனர்.

Karumegangal Kalaiginrana: கமல் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்... நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியாகும் தங்கர்பச்சான் படம்..!

வடமாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு ஊட்டி ஹோலி  வாழ்த்து தெரிவித்த மயிலாடுதுறை ஆட்சியர்

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கு வங்கம், பீஹார், உத்ரகாண்ட், ஒடிசா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 700 பேர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் மேற்கு வங்காளம், பீகார், உத்ரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக நிரந்தர கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Nawazuddin Siddiqui: முன்னாள் மனைவி வைத்த பகீர் குற்றச்சாட்டுகள்: மௌனம் கலைந்த நவாசுதீன் சித்திக்! பரபரப்பு அறிக்கை!

வடமாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு ஊட்டி ஹோலி  வாழ்த்து தெரிவித்த மயிலாடுதுறை ஆட்சியர்

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புரளியைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், கட்டுமானப் பணி நடைபெற்று வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்துக்கு இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று, புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு விருந்தோம்பலில் சிறந்த மாநிலம். இங்கு வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.

MK Stalin Meeting: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கு.. இது உங்களோட பொறுப்புதான்! ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட முதல்வர்!

வடமாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு ஊட்டி ஹோலி  வாழ்த்து தெரிவித்த மயிலாடுதுறை ஆட்சியர்

அப்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் இங்கு பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து புகார்கள் ஏதேனும் இருப்பின்  உதவி எண் 0421 - 2203313 , 9498101300 , 9498101320 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் வருகின்ற ஹோலி பண்டிகை முன்னிட்டு வடமாநில தொழிலாளர்களுக்கும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இனிப்புகளை ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்தார். 

Whats App Update : தேவையில்லாத அழைப்புகளை மியூட் செய்வது எப்படி...? விரைவில் புதிய அப்டேட் தரப்போகும் வாட்ஸ் அப்...!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget