இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் எந்த அமைச்சரும் சாலையில் நடமாடமுடியாது - மன்னார்குடி ஜீயர்
’கோவில்களில் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது’ - மன்னார்குடி ஜீயர் காட்டம் !

"தருமபுர ஆதின பட்டின பிரவேச நிகழ்வை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம், தருமபுர ஆதின மடத்திற்கு கவர்னர் வருகை தந்ததுதான் பட்டின பிரவேச நிகழ்ச்சி ரத்துக்கு காரணம்" என மதுரை ஆதினம் பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று “மதசார்பற்ற நாடு என கூறிக்கொண்டு, ஒரு மதத்ததிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல” என மதுரை ஆதீனம் பேட்டியளித்துள்ளார்.


பட்டினப் பிரவேசம் நடந்தே தீரும். அதை யாராலும் நிறுத்த முடியாது. இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோவில்களில் தலையீடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது. - மன்னார்குடி ஜீயர் பேட்டியளித்துள்ளார்.@SRajaJourno |@gurujourn https://t.co/5Oot9C6SY1
— Arunchinna (@iamarunchinna) May 4, 2022





















